July 13, 2025
  • July 13, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • எல்லா காட்சியும் இதுவரை பார்க்காததாக இருக்கும் படம்
September 16, 2019

எல்லா காட்சியும் இதுவரை பார்க்காததாக இருக்கும் படம்

By 0 908 Views

Two Movie Buff’s நிறுவனம் தயாரிப்பில் பார்த்திபன், கயல் சந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.

இப்படத்தினை எழுதி இயக்கியிருக்கும் சுதர் கூறுவதைக் கேளுங்கள்…,

“கிரிக்கெட் உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் ஒரு தனித்துவமான யோசனை. அதையும் தாண்டி ‘திட்டம் போட்டு திருடுற கூட்ட’த்தில் நான் என்ன தனித்துவம் பார்க்கிறேன் என்றால், இதில் வரும் எல்லா காட்சிகளும் இதுவரை யாரும் பார்க்காத காட்சிகளாக இருக்கும்.

பொதுவாக மற்ற படங்களில் சென்டிமென்ட் காட்சியோ, காதல் காட்சியோதான் பொதுவாக இருக்கும். நடிகர்கள் மட்டும் ஒவ்வொரு படத்திற்கும் மாறிக் கொண்டிருப்பாரகள். ஆனால் இந்த படத்தில் காட்சிக்கு காட்சி புதுமை இருக்கும். ஒரு காட்சியையும் வேறு எந்தப் படத்திலும் எந்த வடிவிலுமே பார்த்திராத வகையில் இருக்கும்.

மியூசியம் செட் ஒன்று படத்தில் உள்ளது. அது செட் என்றே தெரியாத வகையில் அத்தனை வெண்கல சிற்பங்களை கொண்டு துல்லியமாக வடிவமைத்து உள்ளார் எங்கள் கலை இயக்குநர். ஒளிப்பதிவின் மூலம் படத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார் ஒளிப்பதிவாளர்..!”

பார்க்கத்தானே போகிறோம்..!?