கோலிவுட்டில அறிமுகமாகும் இயக்குனர் ராசு ரஞ்சித் நாயகனாக நடித்து ‘தீதும் நன்றும்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் இப்படத்தில் கதாநாயகிகளாக மலையாள நடிகைகளான அபர்ணா பாலமுரளி, லிஜோமோள் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
மேற்படி தீதும் நன்றும்’ படத்தில் நடித்த பிறகுதான் அபர்ணாவுக்கு ‘சூரரைப் போற்று’ பட வாய்ப்பு வந்துள்ளது. லிஜோமோள் ஜோஸும் இந்தப் படத்திற்குப் பிறகுதான் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்நிலையில் அபர்ணா ‘தீதும் நன்றும்’ படத்தின் பிரமோஷனுக்கு அழைத்த போது வரமாட்டேன் என்று மறுத்துவிட்டாராம்.
சில தினங்களுக்கு முன்பு ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக சென்னைக்கு வந்த அவரிடம் ஒரு மணி நேரம் ஒதுக்கி தீதும் நன்றும் பட புரமோஷனுக்காக பேட்டி தர கேட்டிருக்கிறார்கள். அதற்கும் அபர்ணா மறுத்திருக்கிறார். அபர்ணா வரவில்லை என்றால் நானும் வரவில்லை என லிஜோமோளும் கழண்டு கொண்டாராம்.
இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்கு வந்த இயக்குனர் ராசு ரஞ்சித் தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்தார். எங்கள் படத்துக்கு ஒப்பந்தமான போது அவர்கள் இருவரும் சிறிய நடிகைகள். இப்போது பெரிய நடிகைகள் ஆகிவிட்டார்கள். அதனால் வர மறுக்கிறார்கள்… என்று வருத்தப்பட்டார் அவர்.
இதுபோன்று படத்தின் புரமோஷனுக்கு வர தயங்கும் நடிகைகள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல காலமாகவே கோரிக்கை வைக்கப்படுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட சங்கங்கள் இருந்தும் இப்படி தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுக்கும் நடிகைகள் மற்றும் கலைஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கப்படுவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீது கேள்விகள் எழுகின்றன.