இப்போதெல்லாம் 100வது நாள் என்பது ஆறு கிரகங்கள் நேர்க்கோட்டில் வருவது போன்ற அதிசய நிகழ்வு. ஆனால், கலைப்புலி தாணு தயாரித்து வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடித்த ‘அசுரன்’ படம் அதிரி புதிரி வெற்றியைப் பெற்று இன்றைக்கு 100வது நாளைத் தொட்டிருக்கிறது. இதற்குக் காரணமான அனைவருக்கும் தயாரிப்பாளர் எஸ்.தாணு தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டிருப்பதுடன் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவையும் ஏற்பாடு செய்திருக்கிறார். இது ஒருபுறமிருக்க, இதே தாணு தயாரிப்பில் மீண்டும் படம் இயக்க ஒத்துக்கொண்டிருக்கும் வெற்றிமாறன், இந்தப்படத்தில் சூர்யாவை […]
Read Moreகன்னடத்தில் முனி ரத்னா எழுதி தயாரித்து நாகன்னா இயக்கியுள்ள குருக்ஷேத்ரம் 3டி படத்தினை தமிழில் கலைப்புலி எஸ் தாணு வெளியிடுகிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலைப்புலி எஸ். தாணு பேசியதிலிருந்து… “1985ல் நான் தயாரித்த முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனை நடிக்க வைத்தேன். இப்போது இப்படத்தில் அவரது நடிப்பு அற்புதமாக அமைந்துள்ளது. காதல், நட்பு, சகிப்புத்தன்மை என அனைத்தும் இப்படத்தில் அடங்கியுள்ளது. கர்ணன் என்றால் நினைவிற்கு வருவது நடிகர் திலகம் […]
Read Moreஒரு கண் சிமிட்டலில் உலகத்தைக் கட்டிப்போட்ட கண்ணழகி ப்ரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் உருவான ‘ஒரு அடார் லவ்’. அந்தக் கண்ணசைவுக் காட்சி தந்த எதிர்பார்ப்பு காரணமாகவே தயாரிப்பில் அதீத கவனம் வைக்க நேர்ந்து இந்த காதலர் தினத்துக்கு திரையைக் காண வருகிறது. மலையாளத்தில் முதலில் தயாரானாலும் படம் இந்தியாவையே ஈர்த்துவிட இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று நான்கு மொழிகளில் வெளியாகவிருக்கிறது. தமிழில் கலைப்புலி எஸ் .தாணு இந்தப்படத்தை வெளியிடுகிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு […]
Read More’60 வயது மாநிறம்’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்துள்ள ‘துப்பாக்கி முனை’ படத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாகவும் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்திருக்கிறார். ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கிய […]
Read More‘சிம்பு’ என்றாலே ‘வம்பு’ என்பதுதான் சினிமாவைப் பொறுத்தவரை. ஆனாலும் அவருக்கான ரொட்டி சினிமாவிலிருந்து வெதுப்பி வைத்ததாகவே தோன்றுகிறது. ஷூட்டிங்குக்கு வர மறுக்கிறார், படத்தை முடித்துக் கொடுக்க மறுக்கிறார் என்று ஆயிரம் புகார்கள் எழுந்தாலும் அவரது படங்கள் வரிசைக் கட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. இப்போது மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ புக்கானாலும் ஆனது, அவரது அடுத்த சீசன் அற்புதமாக லைன் கட்டி நிற்கிறது. ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் டப்பிங்க் வேலைகள் மட்டுமே மிச்சமிருக்க, அதை முடிக்கும் சிம்பு அடுத்து […]
Read More