November 24, 2024
  • November 24, 2024
Breaking News

Tag Archives

எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனி குடும்பத்திற்கு 20 லட்சம் ஒருவருக்கு வேலை – முதல்வர் அறிவிப்பு

by on June 16, 2020 0

லடாக் எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இந்தியா-சீன படைகள் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.   இதில், இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.   அதில் ஒருவர் ராமநாதபுரம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்ற வீரர். பழனியின் வீர மரணத்திற்கு ஏற்கனவே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.   தெலங்கானா ஆளுநர தமிழிசை, மக்கள் நீதி மய்யம் தலைவர் […]

Read More

மீண்டும் ஊரடங்கு கடுமை ஆக்கப்படுமா? – முதல்வர் விளக்கம்

by on June 12, 2020 0

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் முதலமைச்சர் பேசிய போது வெகுவகமாக நோய்த் தொற்று பரவி வருமவதால் மீண்டும் சென்னையில் ஊரடங்கு கடுமை ஆக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்தினார். “சென்னையில்  மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை . கட்டுப்பாடுகளை […]

Read More

பொது முடக்கம் மே 31 க்கு பிறகும் நீட்டிக்கப்படுமா?

by on May 26, 2020 0

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  ஒவ்வொரு ஊடரங்கு காலம் முடிவதற்கு முன் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தி கருத்துக்களை பெற்று அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுத்து வந்துள்ளார்.    ஒவ்வொரு முறையும் ஊரடங்கு உத்தரவை முழுவதுமாக தளர்த்தக்கூடாது. படிப்படியாக தளர்த்த வேண்டும். சென்னையில் எந்த தளர்வும் செய்யக்கூடாது என்று வலியுறுத்தியது. அதேபோன்றுதான் தமிழக அரசும் உத்தரவு பிறப்பித்தது.   4-வது ஊரடங்கு காலம் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மருத்துவக்குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி […]

Read More

தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்கள் விபரம்

by on May 17, 2020 0

இந்தியா முழுவதும் வரும் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் மே 31 வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.   அத்துடன் இதுவரை அறிவிக்கப் பட்டுள்ள தளர்வுகள் தவிர்த்து 25 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்.   அந்த 25 மாவட்டங்கள் வருமாறு…   கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, […]

Read More

இந்த ஆட்சியின் முடிவு அசிங்கமாகாமல் இருக்க சிறிய வாய்ப்பு – கமல் காட்டம்

by on May 7, 2020 0

தமிழர்காள் வணக்கம். ஒரு வைரஸ் கிருமிக்கு இருக்கும் உயிர் வாழும் ஆசை கூட, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என திண்ணமாக நம்பும் ஒரு அரசு நமக்கு வாய்த்தது ஏன்? ஓட்டுக்கு காசு வாங்கி, 5 வருடம் நம் வாழ்வை இவர்களுக்கு குத்தகைக்கு விட்டோமே அதன் விளைவு தான். பஞ்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், மதுக்கடைகளை திறந்து விட்டால் மக்களின் கவனம் திரும்பிவிடும் என நம்பும் அரசுக்கு பெயர் “அம்மாவின் அரசா” ? தாயுள்ளம் கொண்டோர் அனைவருக்கும் அவமானமல்லவா […]

Read More

Breaking News தமிழ்நாட்டில் மே 7 முதல் கட்டுப் பாடுகளுடன் டாஸ்மாக் திறப்பு

by on May 4, 2020 0

நாட்டின் பல பகுதிகளில் உள்ள பச்சை மண்டலங்களில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. கர்நாடக, ஆந்திராவில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு மதுப்பிரியர்கள் அங்கு அலைமோதி வருகின்றனர். இந்த வீடியோக்கள் இன்று காலை முதலே இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் மே 7ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி அளித்துள்ளது. […]

Read More

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் அரசுக்கு வைத்த கோரிக்கை

by on April 26, 2020 0

நாள்: 26.04.2020 இராஜிவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரியும்,பயிற்சி மருத்துவர்களின், பட்ட மேற்படிப்பு மாணவர்களின் நலன் காத்திடுக. தமிழக அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள். இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தி. சென்னை மருத்துவக் கல்லூரி பயற்சி மருத்துவர்கள் அனைவரும் கடந்த சில நாட்களாக விடுதியிலேயே முடக்கப் பட்டுள்ளனர்.இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதனால் ,பயிற்சி மருத்துவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். முதுநிலை மருத்துவ மாணவர்களும் […]

Read More

இந்திய கொரோனா ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் – தமிழகம் முதலிடம்

by on April 16, 2020 0

இந்தியா முழுவதும் கொரோனா ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் அறிவிப்பு; தமிழகத்தில் 22 மாவட்டங்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 22 மாநிலங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம்பிடித்துள்ளன. நாடு முழுவதும் 170 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 207 மாவட்டங்கள் வெள்ளை மண்டலமாகவும், 353 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் […]

Read More

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க நாளை அமைச்சரவை கூட்டம்

by on April 10, 2020 0

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட 19 மருத்துவர்கள் குழுவுடன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாநில முதல்வர்களும் […]

Read More

ஊரடங்கு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை – முதல்வர்

by on April 3, 2020 0

வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சமுதாய நல கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று   நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள சமுதாய நலக்கூடத்திலும் ஆய்வு செய்தவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதிலிருந்து:- வெளிமாநிலங்களில் இருந்து 1.34 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கி வேலை செய்கின்றனர். அந்தத் தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட  பல்வேறு உதவிகளை அரசு செய்துள்ளது.  மக்கள் சமூக இடைவெளியை […]

Read More