July 9, 2025
  • July 9, 2025
Breaking News

Tag Archives

35 வருடங்களுக்குப் பின் கமல் – மணிரத்னம் இணையும் KH234

by on November 6, 2022 0

கமலின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூன்றும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கே ஹெச்234 ‘(KH234) மணிரத்தினம் இயக்கும் இந்தப் படத்தில் உலக நாயகன் கமலஹாசன் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். அவரது 234வது படமாக இது அமைகிறது.  இதற்கு முன் கமலும் மணிரத்தினமும் 35 வருடங்களுக்கு முன்பு ‘ நாயகன் ‘ படத்தில் இணைந்தார்கள். சமீபத்தில் கமல் நடித்த விக்ரமும், மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வனும் 500 […]

Read More

கமல் வெளியிட்ட டி.எஸ்.பி யின் “ஓ பெண்ணே” சுயாதீன ஆல்பம்

by on October 10, 2022 0

T- Series சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் “ஓ பெண்ணே” பாடல் வெளியீட்டு விழா இன்று பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் அரங்கேறியது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான உலகநாயகன் கமல்ஹாசன் இப்பாடலை வெளியிட்டார். இந்த பாடல் ஒரு பான்-இந்திய பாப் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் தமிழ் பதிப்பை இன்று கமல்ஹாசன் வெளியிட்டார். இந்த பாடலின் ஹிந்தி பதிப்பை […]

Read More

இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் விக்ரம் ஜூலை 8 முதல் டிஸ்னி ஹாட்ஸ்டரில்

by on June 29, 2022 0

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம், உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. திரையரங்குகள் இன்னும் மக்கள் திரளில் திளைத்திருக்கும் நிலையில், இத்திரைப்படம், ஜூலை 8, 2022 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் உலகம் முழுதும் வெளியாகிறது.  டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் ஓடிடி தளங்களில் தொடர் வெற்றிப்படைப்புகளை தந்து முதலிடம் பிடித்துள்ளது. இப்போது இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டான “விக்ரம்” படத்தை தென்னிந்திய திரையுலக ரசிகர்களுக்காக பரிசளிக்க தயாராக உள்ளது. […]

Read More

விக்ரம் திரைப்பட விமர்சனம்

by on June 3, 2022 0

கமல் படம், ரஜினி படம் என்றால் கமல் மற்றும் ரஜினிதான் முதலில் நினைவுக்கு வருவார்கள். அதை யார் இயக்குகிறார்கள் என்பது இரண்டாம் பட்சம்தான்.  ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்த அளவில் இது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாகத்தான் தோன்றுகிறது. அதில் கமல் நடித்திருக்கிறார் என்பதுதான் உண்மை. அதற்குக் காரணம் கமல் படத்தின் குறியீடுகள் குறைந்தும் லோகேஷ் கனகராஜ் படங்களின் குறியீடுகள் அதிகரித்தும் இருப்பதுதான். அதென்ன லோகேஷ் கனகராஜ் பட குறியீடுகள் என்கிறீர்களா..? பிரியாணி, ஜெயில், கொசு மருந்து […]

Read More

விக்ரம் இசை வெளியீட்டின் பாதியிலேயே உதயநிதி கிளம்பியது ஏன்? – கமல் விளக்கம்

by on May 16, 2022 0

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்து  கமல் கதாநாயகனாக நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வாங்கி இருக்க, உதயநிதி விழாவில் கலந்து கொண்டார். ரஜினி, சூர்யா உள்ளிட்டோர் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த சிம்பு பேசியது, “கமல் 50 நடந்த போது நான் மேடையில் […]

Read More

கமலின் விக்ரம் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் கைப்பற்றியது

by on March 30, 2022 0

உலக நாயகன் கமல்ஹாசனின் “விக்ரம்”படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ் உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் “விக்ரம்”. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கமல்ஹாசன், R. மகேந்திரன் இணைந்து மிகப் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இப்படம் ஜூன் 3 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது. தற்போது விக்ரம் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக […]

Read More

உன்னைக் காணாத நான் இன்று நானில்லையே – பிர்ஜு மகராஜ் மறைவு பற்றி கமல்

by on January 17, 2022 0

பாரம்பரிய நடனங்களில் ஒன்றான கதக் நடனத்தில் தன்னிகர் இல்லாமல் தலை சிறந்து விளங்கியவர் லக்னோவை சேர்ந்த பிர்ஜு மகராஜ். இந்தியாவின் உயரிய பெருமைகளுள் ஒன்றான பாரத் விபூஷன் பட்டம் பெற்ற அவர் இரண்டு முறை இந்திய சினிமாவில் தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். தவிர உயரிய இசை நடன விருதுகள் பலவற்றையும் அவர் பெற்றிருக்கிறார். கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தில் வரும் கதக் நடனங்கள் அனைத்தையும் பிர்ஜு மகராஜ் அமைத்திருந்தார். அதற்காக அவருக்கு 2012ஆம் ஆண்டில் தேசிய […]

Read More

கமலஹாசனை சிக்கலுக்குள் விடும் எழுத்தாளர் வாரிசுகளின் கடிதம்

by on December 16, 2021 0

சில நாள்களுக்கு முன் ‘ சில நேரங்களில் சில மனிதர்கள் ‘ என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமல், படக்குழுவினரை வாழ்த்திப் பேசினார். படத்தின் தலைப்பு புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதி இயக்கி அதில் நடித்த நடிகை லஷ்மிக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. அந்தப்படத்துக்கும், கதைக்கும் இந்தப்படத்துக்கு சம்பந்தமில்லை என்று அவர்களே அறிவித்து விட்ட சூழலில் எதற்காக அந்தப் படத்தின் தலைப்பு இதற்கு சூட்டப்பட வேண்டும் என்ற சலசலப்பு எழுந்தது. அதைக் […]

Read More

சினிமாவிலிருந்து நாடகத்துக்கு வந்தவன் நான் – கமல்ஹாசன்

by on November 6, 2021 0

மகிழ் மன்றம் மற்றும் டம்மீஸ் ட்ராமா வழங்க ஶ்ரீவத்சன் நடித்து இயக்கிய “விநோதய சித்தம்” மேடை நாடகம் நேற்று (5-11-2021) நாரத கான சபாவில் நடைபெற்றது.  நாடகம் அரங்கேறிய மேடையில் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  இந்நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் பேசியதிலிருந்து… “நான் இங்கு வந்ததற்கு மிக முக்கிய காரணம் கேபி சார் தான். அவரையும் என்னையும் தனியாக பிரிக்க முடியாது. எனக்கு கிடைக்காத பாக்கியம் திரு ஶ்ரீவத்சன் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. கேபி சாருக்கு […]

Read More

செவிலியர்களாகிய உங்களுக்காக என் குரல் எப்போதும் ஒலிக்கும் – கமல்

by on September 28, 2021 0

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட சுமார் 3,000 செவிலியர்கள், தங்களின் பணி நிரந்தரம் கோரி, சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் இன்று (28.9.2021) மாலை 3 மணியளவில் போராட்டம் நடத்தினர். அறம் இருக்கும் இடத்தில் அன்பும் இருக்கும் என்பதற்கிணங்க, செவிலியர்களின் குரல்களுக்கு பலம் சேர்க்கும்விதமாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.  “ஓர் அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்ய வேண்டுமேயன்றி இருப்பவர்கள் வேலையைப் பறிக்கக்கூடாது. கொரோனா தொற்றின் வேகம் இன்னும் குறையாத நிலையில் […]

Read More