December 16, 2018
  • December 16, 2018
Breaking News
  • Home
  • சிவகார்த்திகேயன்

Tag Archives

கனா படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டர் பற்றி மனம் திறக்கிறார் இயக்குநர்

by on December 10, 2018 0

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘கனா’ படத்தில் அவரும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று டிரைலரைப் பார்த்தால் புரிகிறது. ஆனால், அது வெறும் சிறப்புத் தோற்றமல்ல…” என்று சொல்லும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் அது பற்றி விளக்கினார். “இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் அதில் முழுமையாக ஈடுபட வேண்டும் என விரும்புபவர். […]

Read More

நெல் ஜெயராமனின் சிகிச்சை செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்

by on November 11, 2018 0

இயற்கை வேளாண் துறையில் முக்கியமாக அறியப்படும் ஓரு பெயர் ‘நெல் ஜெயராமன்’. பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவிக்கும் இவர் 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களைக் கண்டறிந்து அவற்றை இயற்கை முறை விவசாயத்தில் பெருக்கி பிற விவசாயிகளும் பயன் பெறும் விதத்தில் பயிற்சியும் அளித்து வருபவர். ஆனால், சமூகம் போலவே இயற்கையும் அவரை வஞ்சித்துவிட கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடும் புற்றுநோயுடன் போராடி வருகிறார். உலகெங்கிலுமுள்ள தமிழர்களின் ஆதரவால் சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ புற்றுநோய் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் தங்கி […]

Read More

சிவகார்த்திகேயன் மகளுடன் பாடிய பாடல் 5 கோடி பார்வைகளைக் கடந்தது

by on October 18, 2018 0

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மூலம் ‘கனா’ படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கும் செய்தி அனைவருக்கும் தெரிந்ததுதான். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் தர்ஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கனா’ படத்தின் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அதில் சிவகார்த்திகேயனும், அவர் மகள் ஆராதனா மற்றும் வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கிறார்கள். இதுபற்றி சிவகார்த்திகேயன் இப்படி சிலாகிக்கிறார். “சில நேரங்களில், நாம் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். […]

Read More

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அறிவியல் புனைகதையா..?

by on September 19, 2018 0

வசூல் ராஜாவாக மாறிய ‘சீமராஜா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு வந்துள்ளது. அந்தப் படத்தையும் ஆர்.டி.ராஜாவின் ’24 ஏஎம் ஸ்டூடியோஸ்’ நிறுவனமே தயாரிக்கிறது. அந்தப் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கவிருக்கிறார். விஷாலை வைத்து மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ வெளியாகி வெற்றி பெற்றது தெரிந்த விஷயம்தான். இதற்கு இடையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும், ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ஆர்.ரவிக்குமார் படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருவதும் நாம் அறிந்த விஷயங்களே. இதற்கு அடுத்த […]

Read More

சீமராஜா விமர்சனம்

by on September 14, 2018 0

‘சரவண பவனி’ல் என்ன கிடைக்கும், ‘தலப்பாக் கட்டி’யில் என்ன கிடைக்கும் என்று சாப்பிடச் செல்பவர்களுக்கு சரியாகவே தெரியும். அப்படி சிவகார்த்திகேயன் + பொன்ராம் கூட்டணியில் அமைந்த படம் எப்படி இருக்கும் என்பது ரசிகர்களுக்கு அத்துப்படி. அந்த கும்மாளம் ஏற்கனவே இரண்டுமுறை நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனாலும், கடந்த வேலைக்காரன் படத்தில் சமூகம் சார்ந்து ரசிகர்களை யோசிக்க வைத்துவிட்ட சிவகார்த்திகேயனின் புரிந்துணர்வும் இதில் சேர்ந்து கொள்ள கும்மாளம், கொண்டாட்டமாகவும் மாறியிருக்கிறது. அப்படி வழக்கமான சிங்கம்பட்டி, புளியம்பட்டி சீமைகளின் மோதல், மோதலுக்கு […]

Read More

சிவகார்த்திகேயன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை சீமராஜா பூர்த்தி செய்யும் – பொன்ராம்

by on September 11, 2018 0

இளைய வசூல் மன்னன் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என அடுத்தடுத்து இரண்டு மெகா வெற்றிகளைக் கொடுத்த இயக்குனர் பொன்ராம், சீமராஜாவும் வெற்றிதான் என்ற உறுதியில் இருக்கும் அதே சமயம் ரசிகர்களின் வரவேற்பைக் காண்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளார். “ஒரு மாணவர் பரீட்சை முடிவுக்கு காத்திருப்பதை போலவே நானும் காத்திருக்கிறேன்..!” என சிரிக்கிறார் பொன்ராம். முழு படக்குழுவும் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், “எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் உணர்வு இருக்கிறது..!” […]

Read More

யார் மீதும் எனக்கு பயமோ, பொறாமையோ கிடையாது – சிவகார்த்திகேயன்

by on September 2, 2018 0

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களைத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக சிவகார்த்திகேயனும், இயக்குநர் பொன்ராமும் மூன்றாவதாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி என நட்சத்திரப் பட்டாளத்தோடு சிவகார்த்திகேயன் களமிறங்க, அவருக்கு பக்கத்துணையாக டி.இமான் இசையமைத்திருக்கிறார். ’24 ஏஎம் ஸ்டூடியோஸ்’ பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த சீமராஜா ஏற்கனவே அறிவித்தபடியே விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. மதுரையில் மிக பிரமாண்டமாக வெளியாகிய டீசர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ட்ரெய்லர் […]

Read More

நண்பர்களுக்கு நான் செய்யும் கடமை – சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

by on August 23, 2018 0

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக தயாரித்திருக்கும் படம் ‘கனா’. பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கனா திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் இந்த படத்துக்கு சிவகார்த்திகேயன் மற்றும் அருண்ராஜாவின் நண்பரும், மரகத நாணயம் புகழ் திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகபிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் இயக்குனர் பாண்டிராஜ், […]

Read More
  • 1
  • 2