January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இலங்கை வாலிபர் மன்னிப்பு கோரும் வீடியோ
October 26, 2020

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இலங்கை வாலிபர் மன்னிப்பு கோரும் வீடியோ

By 0 732 Views

பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட 800 என்ற படத்தில் அவரது வேடத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்து உலகமெங்கும் உள்ள தமிழர்களிடம் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்தப் படத்தில் இருந்து விலகினார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்த ஒரு வாலிபர் விஜய்சேதுபதியின் மகளுக்கு வக்கிரமான பாலியல் மிரட்டல் விடுத்தது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அந்த மிரட்டல் மீதான புகார் அளிக்கப்பட்டதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் துப்பு துலக்கியதில் அப்படி மிரட்டல் விடுத்த வாலிபர் இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழர் என்பது தெரியவந்தது.

அவர் மீதான நடவடிக்கை எடுப்பதற்காக சர்வதேச போலீஸ் உதவியை நாட தமிழக காவல்துறை முடிவெடுத்தாக ஒரு செய்தி வந்தது.

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த அந்த வாலிபர் ஒரு காணொளி வெளியிட்டு அதில், தான் செய்தது மிகப் பெரிய தவறு என்றும் அந்தத் தவறுக்காக விஜய் சேதுபதியும் அவரது மகளும் அவரது மனைவியும் தன்னை மன்னித்து விடுமாறு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார் அந்த வீடியோ கீழே…