January 24, 2026
  • January 24, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கடந்த வாரம் பிறந்த மகனை அறிமுகப்படுத்திய பாடகி ஸ்ரேயா கோஷல்
June 3, 2021

கடந்த வாரம் பிறந்த மகனை அறிமுகப்படுத்திய பாடகி ஸ்ரேயா கோஷல்

By 0 584 Views

தேவதாஸ் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம், பின்னணி பாடகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா கோஷல். அந்த படத்தில் இவர் பாடிய ‘சலக் சலக்’ என்ற பாடல், சூப்பர் ஹிட் ஆனது.

பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, பஞ்சாபி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடத் துவங்கினார். அந்தந்த மொழிகளில் சரியான உச்சரிப்பை தந்து அசத்துபவர் ஸ்ரேயா.

ஆறு வருடங்களுக்கு முன் தொழிலதிபர்  திருமணமான ஸ்ரேயா கோஷலுக்கு மே 22 ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்த செய்தியை ஸ்ரேயா கோஷல் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

குழந்தை பிறந்து 10 நாட்கள் ஆன நிலையில், இப்போது குழந்தையின் புகைப்படத்தை கணவரோடு சேர்ந்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை மட்டும் இன்றி, தங்களுடைய வாழ்த்துக்களையும் குவித்து வருகிறார்கள்.