இந்திய மொழிகள் பலவற்றிலும் 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்தது மட்டுமில்லாமல் ஆறு தேசிய விருதுகள் உள்ளிட்ட பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் அமரர் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம்.
இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மறைந்த அந்த சாதனையாளருக்கு இந்தியா முழுமையில் இருந்தும் அஞ்சலிகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் அவரது உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இதன் எதிரொலியாக தாமரை பக்கத்திலுள்ள எஸ் பி பி யின் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட இருக்கும் அவரது உடலை காவல்துறையின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் செய்தியில் “தமிழ்நாடு மட்டுமன்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்..! ” என்று அறிவித்திருக்கிறார்.
உலகப் புகழ்பெற்ற இந்திய பாடகருக்கு இந்த மரியாதை நியாயமானதுதான்..!