October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சிவகார்த்திகேயன் திறந்து வைத்த சூரி யின் சைவ அசைவ உணவகம் கேலரி
November 1, 2019

சிவகார்த்திகேயன் திறந்து வைத்த சூரி யின் சைவ அசைவ உணவகம் கேலரி

By 0 1725 Views
படங்களின் மூலம் நகைச்சுவை விருந்து அளித்து வந்த நடிகர் சூரி தமிழ் மக்களுக்கு அருமையான அறுசுவை உணவை அளிக்க எண்ணி 2017ம் ஆண்டு ‘அம்மன்’ உயர்தர சைவ உணவகத்தை மதுரை காமராஜர் சாலையில் துவக்கினார்.

‘அம்மன்’ உணவகத்தின் சுவைமிகுந்த உணவிற்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை அளித்து நடிகர் சூரியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

தற்போது நடிகர் சூரி மேலும் தனது உணவக கிளைகளை பெருக்க வேண்டி ‘அம்மன்’ உயர்தர சைவ உணவகம் மற்றும் ‘அய்யன்’ உயர்தர அசைவ உணவகம் ஆகிய இரண்டு புதிய கிளைகளை மதுரை அவனியாபுரம், ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் துவக்கியுள்ளார்.

இந்த புதிய உணவகங்களை சூரியின் உடன் பிறவா சகோதரரான நடிகர் சிவகார்த்திகேயன் இன்று (நவம்பர் 1) குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.

பல பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் ‘அம்மன்’ உயர்தர சைவ உணவகம் மற்றும் ‘அய்யன்’ உயர்தர அசைவ உணவகத்தின் திறப்புவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கீழே திறப்பு விழா கேலரி…

Soori Restaurant (3)

Image 3 of 7