January 15, 2025
  • January 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பரிதாப நிலையில் பாடகர் டி எம் சவுந்தரராஜன் சகோதரர்
June 9, 2020

பரிதாப நிலையில் பாடகர் டி எம் சவுந்தரராஜன் சகோதரர்

By 0 702 Views

திரையிசை உலகில் தனி சாம்ராஜ்யம் நடத்தி இன்று வரை தனக்கான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் டி.எம் சவுந்தர்ராஜன். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே 1944-ல் இவரது சகோதரரான டிஎம் கிருஷ்ணமூர்த்தி உடன் கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார்.

டிஎம்எஸ்சை விட நான்கு வயது இளையவரான டி.எம் கிருஷ்ண மூர்த்தி மிருதங்க வித்துவானாக ஜொலித்தவர். குறிப்பாக டிஎம்எஸ்.,க்கு இசை ரீதியாக உதவிகள் செய்தவர் அவர்.

அவரது இசை சேவையை பாராட்டி கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

தற்பொழுது 94 வயதான டி.எம்.கிருஷ்ணமூர்த்தி , 91 வயதான தனது மனைவியுடன் ஒத்தக்கடை அருகே நரசிங்கம் அப்பகுதியில் வசித்து வருகிறார். கலைமாமணி விருது பெற்றதற்காக தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்படும் 2500 ரூபாயை நம்பியே இருவரும் குடும்பம் நடத்தி வருகின்றனர்.

அதற்கான ஓய்வூதிய புதுப்பிப்பு இந்த மாதத்துடன் நிறைவு பெறுவதால் அதை புதுப்பிப்பதற்காக ஒத்தக்கடை பகுதியிலிருந்து அரசு பேருந்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். நிற்க முடியாத அளவிற்கு முதுமை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக சாலையில் மயங்கி விழுந்தார்.

தூக்க ஆளின்றி நீண்ட நேரம் கூச்சலிட்டுக் கொண்டு இருந்த அவரை அங்கிருந்தவர்கள் தூக்கி விசாரித்தபோது வந்த காரணத்தைக் கூறினார். ஓய்வுதியம் புதுப்பிக்கும் பணி அடுத்த மாதம் நடைபெறுவதால் சென்று வருமாறு மாவட்ட கருவூல அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் ஆட்டோ மூலம் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஆதரவின்றி முதுமையில் பிரபலங்கள் கூட தவிர்த்து வருவது வேதனை அளிக்கிறது.

நடமாட முடியா முதியவர்களுக்கு அரசு மாற்று ஏற்பாடுகள் செய்யலாமே..?