May 19, 2024
  • May 19, 2024

Simple

பூமராங் படத்தில் அதர்வாவின் மூன்று முகப் போராட்டம்

by on March 30, 2018 0

ஆர். கண்ணன் தயாரித்து இயக்கும் பூமராங் படத்தில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார் அதர்வா. அதற்காக ‘ப்ரோஸ்தடிக்’ வகையில் மேக்கப் செய்து கொள்கிறாராம். இதற்காக ‘பத்மாவத்’, நவாசுதீன் சித்திக் நடித்த ‘மாம்’, அமிதாப், ரிஷி கபூர் நடித்த 102 நாட் அவுட் ஆகிய படங்களில் இப்படி ‘ப்ரோஸ்தடிக்’ மேக்கப்பால் புகழ்பெற்ற ‘ப்ரீத்திஷீல் சிங்’ மற்றும் ‘மார்க் ட்ராய் டிஸோசா’ வை அழைத்து வந்து அதர்வாவுக்கு மேக்கப் பஒட வைத்திருக்கும் ஆர்.கண்ணன் இது குறித்து கூறியது. “பூமராங்’கில் அதர்வாவின் […]

Read More

நடிப்பதற்கு நேரமில்லை – திவ்யா சத்யராஜ்

by on March 30, 2018 0

சத்யராஜின் மகள் ‘திவ்யா சத்யராஜ்’ சினிமாவில் நடிக்கப் போகிறார் என்று சமீப காலமாக தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியாவதும் அவர் மறுப்பதும் வாடிக்கையாகி விட்டது. இப்போது மீண்டும் அதே வதந்தி. ஆனால், வடிவேலு இயக்கத்தில் திவ்யா நடிக்க இருப்பதாக உறுதியாகவே செய்திகள் வர, இப்போதும் அதே உறுதியாக தன் செய்தியாளர் மூலம் ஊடகங்களுக்கு மறுப்புச் செய்தி அனுப்பியிருக்கிறார் திவ்யா. “இயக்குநர் வடிவேல் அப்பாவை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தையில் இருக்கிறாரே அன்றி என்னை நடிக்க வைக்க அல்ல. […]

Read More

முதல் படமே மோகன்லாலுடன் – குதூகலத்தில் சாம் சிஎஸ்

by on March 30, 2018 0

விக்ரம் வேதா வெற்றியின் காரணங்களில் ஒன்றான இசையை உருவாக்கிய ‘சாம் சிஎஸ்’தான் இன்று கோலிவுட் இசையின் நம்பிக்கை நட்சத்திரம். இப்போது கேரளாவிலும் தன் இசையுடன் களம் புகுந்திருக்கும் சாம் சி.எஸ்ஸுக்கு முதலடியே மோகன்லாலின் ‘ஒடியன்’ படமாக அமைந்தது சுவாரஸ்யம். “விக்ரம் வேதா ரிலீஸுக்குப் பிறகு பாலிவுட் உட்பட பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் எனக்கு வந்தன. ஆனால் மோகன்லால் சாரின் ‘ஒடியன்’ படத்துக்கு கேட்டபோது என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் லீனியர் கதை சொல்லலில் மிக சிறப்பாக […]

Read More

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கமல் பங்கேற்பு

by on March 29, 2018 0

மக்கள் நீதி மன்றத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தப்படும் என்றார். மேலும் அவர் பேசியதிலிருந்து… “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்த முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். பிரதமர் நினைத்தால் மேலாண்மை வாரியத்தை எளிதாக அமைக்க முடியும். அப்படி இரு மாநிலத்தின் தண்ணீர் தேவைக்காக வாரியம் அமைப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. காவிரி விவகாரத்தில் ஓட்டுக்காக விளையாட வேண்டாம்..!” என்றவர் காவிரி விவகாரம் தொடர்பான […]

Read More

இஸ்ரோவின் ஜிசாட் 6ஏ விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது

by on March 29, 2018 0

தொலைத் தொடர்புக்கு உதவும் ‘ஜிசாட் 6ஏ’ செயற்கைக்கோளை ‘இஸ்ரோ’ தயாரித்துள்ளது. ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08’ ராக்கெட் மூலம் இதனை விண்ணில் ஏவுவதற்கான பணி முடுக்கி விடப்பட்டது. ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் நேற்று 27 மணிநேர கவுன்ட் டவுன் தொடங்கியது. கவுன்ட் டவுன் முடிந்து இன்று (29-03-2018) மாலை 4.56 மணிக்கு ‘ஜிசாட் 6ஏ’ செயற்கைக்கோளை சுமந்தபடி ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08’ […]

Read More