March 20, 2025
  • March 20, 2025

Simple

வருணன் திரைப்பட விமர்சனம்

by on March 16, 2025 0

நீரைத் தரும் கடவுளுக்கு வருண பகவான் என்பது புராணப் பெயர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதன் அடிப்படையிலேயே தண்ணீர் தொழில் பற்றிய இந்தக் கதைக்கு வருணன் என்கிற தலைப்பு பொருத்தமாகவே இருக்கிறது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பதுதான் படத்தின் மையக்கரு. ஆனால், படம் முழுவதும் வட சென்னையில் நடப்பதால் ‘தாதா இன்றி அமையாது வடசென்னை’ என்கிற ரீதியில் தண்ணீர்த் தொழிலைக் கையில் வைத்திருக்கும் இரண்டு தாதாக்களின் மோதலைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜெயவேல் முருகன்.  இதுவரை வடசென்னை […]

Read More

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் திரைப்பட விமர்சனம்

by on March 15, 2025 0

1980, 90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து உதயகீதம், உன்னை நான் சந்தித்தேன் போன்ற மறக்க முடியாத படங்களைத் தந்த இயக்குனர் கே ரங்கராஜ் இதனை வருடம் கழித்து இந்த 2k யுகத்தில் ஒரு படத்தை இயக்கி இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் ஆச்சரியமாக இருந்தது.  அதுவே இந்தப் படத்தை பார்க்கத் தூண்டும் காரணியாக அமைய படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.  நாயகன் ஸ்ரீகாந்த், கோடீஸ்வரத் தொழிலதிபர் அமித்திடம் வேலை பார்க்கிறார். என்ன வேலை […]

Read More

ஸ்வீட் ஹார்ட் திரைப்பட விமர்சனம்

by on March 15, 2025 0

காதலனும், காதலியும் ஒத்த உணர்வில் இருந்தால்தான் காதல் வரும் என்பதில்லை. அவர்களுக்குள் எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் காதல் மலரும். ஆனால் அந்தக் காதலின் போக்கு எப்படி இருக்கும் என்பதைத் தான் இயக்குனர் இந்தப் படத்தின் மெயின் லைனாக எடுத்துக் கொண்டிருக்கிறார். நாயகன் ரியோராஜுக்கு பெற்றோரின் திருமண வாழ்க்கை திசை மாறிப் போனதில் திருமணம், குழந்தை உள்ளிட்ட குடும்ப உறவுகளின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. ஆனால், நாயகி கோபி ரமேஷ் அப்படியே அவருக்கு நேர்மாறாக திருமணம் செய்து […]

Read More

அறிமுக இயக்குநர்களை மீடியாக்கள் ஊக்குவிக்க வேண்டும் – மர்மர் இயக்குநர் வேண்டுகோள்

by on March 14, 2025 0

தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக “மர்மர்” உருவாகி இருக்கிறது. மர்மர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான மர்மர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்று வருகிறது. முதற்கட்டமாக இந்தப் படம் 100 திரைகளில் மட்டுமே வெளியானது. எனினும், ரசிகர்களின் பெரும் ஆதரவோடு இந்தத் திரைப்படம் ரிலீசான இரண்டாவது நாளில் இதன் திரைகள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்தது. தொடர்ந்து இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், […]

Read More

மான்ட்ரா எலக்ட்ரிக் தமிழ்நாட்டில் தனது முதல் மின்-எஸ். சி. வி டீலர்ஷிப்பை திறக்கிறது!

by on March 14, 2025 0

சேனல் கூட்டாண்மையில் டிவிஎஸ் வெஹிக்கிள் மொபிலிட்டி சொல்யூஷன்  சென்னை, 14 மார்ச் 2025 – மான்ட்ரா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மின்-எஸ். சி. வி பிரிவான டிவோல்ட் எலக்ட்ரிக் வெஹிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சென்னை மாதவரத்தில் தனது முதல் இ-எஸ். சி. வி டீலர்ஷிப் திறப்புடன் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இது தென்னிந்திய தமிழ்நாட்டில் முதல் மின்-எஸ். சி. வி டீலர்ஷிப் ஆகும், இது மாநிலத்தில் அதன் தடத்தை விரிவுபடுத்துவதற்கான பிராண்டின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. புதிய […]

Read More

மாடன் கொடை விழா திரைப்பட விமர்சனம்

by on March 14, 2025 0

மண்ணின் மணத்தைக் கொண்டு இருக்கும் கிராமத்துக் கதைகள் எப்போதுமே அனுபவங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும். அந்த வகையில் இந்தப் படமும் கிராமத்துக்.காவல் தெய்வம் சுடலை மாடன் குறித்த நம்பிக்கையில் விளைந்திருக்கிறது. நாயகன் கோகுல் கவுதம் குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள சுடலைமாடனுக்கு வருடம் தோறும் திருவிழா நடக்க, அதைப் பரம்பரை பரம்பரையாக அவர்கள் குடும்பமே எடுக்கிறது. ஆனால், ஒரு வருடம் அங்கு கூத்துக் கட்டும் திருநங்கை ஒருத்தி இறந்து போக, அதிலிருந்து அந்தத் திருவிழா நின்று போகிறது. அத்துடன் […]

Read More