April 15, 2025
  • April 15, 2025
Breaking News
June 6, 2018

சிம்பு சீறிப் பாயவிருக்கும் அடுத்த சீசன்

By 0 1167 Views

‘சிம்பு’ என்றாலே ‘வம்பு’ என்பதுதான் சினிமாவைப் பொறுத்தவரை. ஆனாலும் அவருக்கான ரொட்டி சினிமாவிலிருந்து வெதுப்பி வைத்ததாகவே தோன்றுகிறது. ஷூட்டிங்குக்கு வர மறுக்கிறார், படத்தை முடித்துக் கொடுக்க மறுக்கிறார் என்று ஆயிரம் புகார்கள் எழுந்தாலும் அவரது படங்கள் வரிசைக் கட்டிக்கொண்டுதான் இருக்கின்றன.

இப்போது மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ புக்கானாலும் ஆனது, அவரது அடுத்த சீசன் அற்புதமாக லைன் கட்டி நிற்கிறது.

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் டப்பிங்க் வேலைகள் மட்டுமே மிச்சமிருக்க, அதை முடிக்கும் சிம்பு அடுத்து தான் இசையமைக்க ஒத்துக் கொண்டிருக்கும் 90 எம் எல் படத்தின் இசை கோர்ப்பு வேலைகளை முடிக்கிறார்.

ஒரு மாத ஓய்வுக்குப் பின் விஜயா புரடக்‌ஷன்ஸில் அவரது 34வது படம் அமைகிறது. அதற்குப்பின் அமையும் தன் 35வது படத்தைத் தானே நடித்து இயக்கவிருக்கிறார்.

36வது சிம்புவின் படமாக கௌதம் மேனன் – லைகா கூட்டணியில் அமையும் ‘விண்ணைத் தாண்டி வருவாயா 2’ படத்திலும், #சிம்பு37 ஆக கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

சிம்பு மட்டும் சின்சியராக இருந்தால் அவரை அடித்துக் கொள்ளவே முடியாது..!