September 16, 2025
  • September 16, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சிம்பு சிக்கலுக்குள்ளாக்கும் அடுத்த தயாரிப்பாளர்
October 10, 2019

சிம்பு சிக்கலுக்குள்ளாக்கும் அடுத்த தயாரிப்பாளர்

By 0 732 Views

ஞானவேல்ராஜா தயாரிப்பில் நார்தன் இயக்கி சிம்பு நடிக்க உருவாகி வரும் கன்னட படத்தின் ரீமேக்கான ‘மஃப்டி’ கைவிடப்படுவதாக நேற்று செய்திகள் வந்தன.

2017ஆம் ஆண்டு கன்னடத்தில் சிவ ராஜ்குமார், ஶ்ரீமுரளி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘மஃப்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் முறையே சிம்பு, கெளதம் கார்த்திக் நடித்து வந்தனர். கன்னடத்தில் இயக்கியதும் இதே நார்தன்தான்.

கடந்த ஜூன் மாதம் பெங்களூருவில் இப்படம் தொடங்கப்பட்டது. அவரை விட்டால் பிடிக்க முடியாது என்பதால் ஒரே ஷெட்யூலில் அவர் பகுதிகளை முடிக்க எண்ணியிருந்தனர். இந்நிலையில், சிம்பு தனது வழக்கமான பாணியில் வந்த வேகத்திலேயே அடுத்த ஷெட்யூலுக்கு வருகிறேன் என்று கிளம்பி விட்டாராம். 

டேக்கா கொடுத்துவிட்டு ‘எஸ்’ ஆன சிம்பு இன்றுவரை அடுத்த தேதிகளைக் கொடுக்கவில்லையாம். இந்நிலையில்தான் இப்படம் பாதியிலேயே கைவிடப்படலாம் என செய்திகள் வந்தன. அத்துடன் சிம்பு குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரும் செய்தார் ஞானவேல்ராஜா என்ற தகவலும் கசிந்தது.

ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் ‘மஃப்டி’ படத்தின் படப்பிடிப்பிற்கு சிம்பு வரவில்லை என பரப்பப்படும் தகவல் தவறானது என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் மனு எதையும் ஞானவேல் ராஜா சார்பில் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்கள்.

ஆனால், சிம்புவை எப்படியாவது கூட்டிவந்து படத்தை முடித்துவிடும் எண்ணத்தில்தான் ஞானவேல் ராஜா இருப்பதாகத் தெரிகிறது.

இன்னும் எத்தனை பேர் வயிற்றில் புளியைக் கரைப்பாரோ சிம்பு..?