November 21, 2024
  • November 21, 2024
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • இளைஞர்களுக்கான இதய விழிப்புணர்வு செயல்திட்டத்தை தொடங்கும் பிரசாந்த் மருத்துவமனை!
September 10, 2022

இளைஞர்களுக்கான இதய விழிப்புணர்வு செயல்திட்டத்தை தொடங்கும் பிரசாந்த் மருத்துவமனை!

By 0 499 Views

லயோலா கல்லூரியுடன் இணைந்து இதை செயல்படுத்துகிறது.

  • தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறையின் அமைச்சர் திரு. சிவ.V. மெய்யநாதன் இப்பரப்புரை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  •  
  • இப்பரப்புரை செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக”Heart Film Festival” நடத்தப்படவிருக்கிறது.
  •  
  • குறும்பட போட்டி நிகழ்வான இதில் கல்லூரி மாணவர்கள்,திரைத்துறை ஆர்வலர்கள் மற்றும் படைப்பாளிகள் பங்கேற்கலாம்

 

சென்னை, 10 செப்டம்பர், 2022: இந்நாட்டில் இளவயது நபர்கள் மத்தியில் இதயப் பிரச்சனைகள் அதிகம் இருப்பது குறித்து வளர்ந்து வரும் கவலைகளுக்கு மத்தியில் சென்னை மாநகரின் முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுள் ஒன்றான பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ், தமிழகத்தில் பிரபலமான லயோலா கல்லூரியின் காட்சித் தொடர்பியல் (Visual Communication) துறை ஆகியவை ஒருங்கிணைந்து “இளம் இதயங்களை காப்போம்” (Save young Hearts) என்ற பெயரில் இதயம் சார்ந்த விழிப்புணர்வு பரப்புரை திட்டத்தை ஒரு மாத காலம் நடத்தவிருப்பதை இன்று இணைந்து அறிவித்திருக்கின்றன.

தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறையின் அமைச்சர் திரு. சிவ.V. மெய்யநாதன் அவர்களால் இப்பரப்புரை திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. 2022 செப்டம்பர் 29-ம் தேதியன்று அனுசரிக்கப்படவுள்ள “உலக இருதய தினம்” என்பதன் முன்னோட்ட நிகழ்வாக திடீர் நடன நிகழ்ச்சிகள் (Flash Mobs), பொது உடல்நல பரிசோதனை முகாம்கள் மற்றும் தெருமுனை நாடகங்கள் போன்ற பல தொடர் செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இப்பரப்புரை திட்டம் நடத்தப்படுகிறது.

இதற்கும் கூடுதலாக, இளம் தலைமுறையினர் மத்தியில் காணப்படும் இதயம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள், பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை மேலும் பரப்பவும் மற்றும் வைகள் நிகழாமல் தடுப்பதற்கான முன்தடுப்பு நடவடிக்கைகள் பற்றி வலியுறுத்தவும் இதய திரைப்பட திருவிழா என்ற பெயரில் ஆர்வமூட்டுகின்ற குறும்பட போட்டி ஒன்றும் நடத்தப்படவிருக்கிறது.

Heart film festival / குறும்பட போட்டிக்கான படைப்புகளை செப்டம்பர் 10-ம் தேதி முதல் அனுப்பி வைக்கலாம். இப்படைப்புகள் வந்து சேர்வதற்கான கடைசி தேதி 2022 செப்டம்பர் 24 ஆக இருக்கும். தமிழ்நாடெங்கிலும் உள்ள திரையுலகப் படைப்பாளிகள் மற்றும் ஆர்வலர்கள் தங்களது பெயர்களை பதிவுசெய்து இப்போட்டியில் பங்கேற்கலாம் மற்றும் 5 நிமிடங்களுக்கு மிகைப்படாத அதிகபட்ச காலஅளவுக்குள் தங்களது வீடியோ உள்ளடக்கப் படைப்புகளை சமர்ப்பிக்கலாம்.

இயக்குனர் பாலசேகரன், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் எடிட்டர் ஆர்.கே. செல்வா போன்ற புகழ்பெற்ற திரைப்பட ( ஊடக ஆளுமைகளை உள்ளடக்கிய நடுவர்கள் குழு, கிடைக்கப்பெறும் குறும்படங்களிலிருந்து மூன்று சிறந்த படைப்புகளை தேர்வு செய்யும். முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வெற்றியாளர்களுக்கு முறையே ரூ.1 இலட்சம், ரூ.50,000 மற்றும் ரூ.25,000 என்ற ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள நபர்கள் மற்றும் படைப்பாளிகள் அவர்களது விண்ணப்பங்களை கீழ்க்கண்ட தளத்தில் சமர்ப்பிக்கலாம்:

https://www.saveyounghearts.com/short-film-festival/ 

தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறையின் அமைச்சர் திரு. சிவ.V. மெய்யநாதன் இப்பரப்புரை திட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில் கூறியதாவது: “உலகளவில் உயிரிழப்பிற்கு மிகப்பெரிய காரணியாக இருக்கின்ற இதயநோய் பிரச்சனைகளை சமாளிப்பதற்கு மக்களை ஒருங்கிணைப்பதற்கும் மற்றும் அவர்களது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துமாறு அவர்களை ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக, இளம் இதயங்களை காப்போம் என்ற இந்த முனைப்புத்திட்டம் இருக்கும். இதய இரத்தநாள நோய் என்பது, வராமல் முன்தடுக்கக்கூடியது.

எனவே, தங்களது இதய ஆரோக்கியம் பற்றி அதிகமாக அறிந்துகொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு இத்திட்டத்தின் மூலம் மக்களை நாம் ஊக்குவிப்பது அவசியம். வாழ்க்கைமுறையில் சிறப்பான விருப்பத்தேர்வுகளை எடுக்க மக்களுக்கு உதவவும் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைப் பழக்கவழக்கங்களை உருவாக்கிக்கொள்ள தூண்டவும் இப்பரப்புரை செயல்திட்டம் உதவும் என்று நான் நம்புகிறேன். பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் லயோலா கல்லூரியின் காட்சித் தொடர்பியல் (Visual Communication) துறை ஆகியவற்றோடு சேர்ந்து இந்த சிறப்பான திட்டத்தில் பங்கு வகிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இதய ஆரோக்கியம் தொடர்பான இந்த மிக முக்கியமான செய்தியை பரப்பும் அவர்களை இந்த முயற்சி சிறப்பான வெற்றியடைய அவர்களை நான் வாழ்த்துகிறேன்.”

சென்னை பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ் ன் இயக்குனர் டாக்டர். பிரசாந்த் கிருஷ்ணா இதுபற்றி பேசுகையில்,

“கடந்த சில ஆண்டுகளாகவே இதய செயலிழப்பு / மாரடைப்பு நேர்வுகள் இளம் வயதினர் மத்தியில் அதிகரித்து வந்திருப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் அதிக கவலையளிக்கும் விஷயமாக இது இருக்கிறது. நாற்பது வயதிற்கு கீழ்பட்ட இளநபர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது, கடந்த 10 ஆண்டு காலஅளவில் ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 2 சதவிகிதம் என்ற அளவிற்கு அசுரத்தனமாக வளர்ச்சி கண்டிருக்கிறது.

உலகளவிலான புள்ளி விவரங்களின்படி 17 மில்லியன் நபர்கள் இதயநாள நோய்களின் காரணமாக உயிரிழக்கின்றனர். மொத்த உயிரிழப்பில்; இது ஏறக்குறைய இது 30% ஆகும். தங்களது இதயங்களை முறையாகவும், உரிய நேரத்திற்குள்ளும் அக்கறையுடன் பராமரிப்பதை உறுதி செய்வதில் இளம் நபர்கள் எப்படி எளிய முயற்சிகளை எடுக்கலாம் என்பது மீது நிபுணர்கள் வழங்கும் முறையான தகவல் மக்களை சென்றடைவதை உறுதி செய்வதற்கும் மற்றும் இதய பராமரிப்பு மீதான விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும் எமது இத்திட்டம் ஒரு அறைகூவலாக இருக்கும்.

சத்தமில்லாமல் திடீரென நிகழ்ந்து உயிர்களைப் பறிக்கும் உயிர்கொல்லி நோயான இதன்மீது மக்கள் மத்தியில் எச்சரிக்கை உயர்வை உயர்த்துவதற்கான இந்த நல்ல நோக்கத்திற்காக லயோலா கல்லூரியின் காட்சித் தொடர்பியல் (Visual Communication) துறையுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மிக முக்கியமான விஷயத்தில் இளம் மாணவர்களின் சிறப்பான படைப்புகளை காண்பதை நாங்கள் ஆர்வத்தோடு எதிர்நோக்குகிறோம்,” என்று கூறினார்.

லயோலா கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறையின் செய்தி தொடர்பாளர் டாக்டர். B. நித்யா பேசுகையில்,

“இளவயது நபர்கள் மத்தியில் இதயம் சார்ந்த நலவாழ்வை முன்னிலைப்படுத்தி ஊக்குவிப்பது மீது பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ் உடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமையும், கௌரவமும் கொள்கிறோம். ஆற்றல் மிக்க தொடர் நிகழ்வுகளின் வழியாக இளையோர் மத்தியில் நல்ல தாக்கத்தை இச்செயல்திட்டம் உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இளவயதிலேயே இதய செயலிழப்புகளால் உயிரிழப்புகள் நிகழாமல் தடுக்க நிலைப்புத்தன்மையுள்ள தீர்வுகளை வழங்கும் நோக்கத்தோடு ஒருங்கிணைந்து செயலாற்றுவதே எமது இலக்காகும்,”என்று கூறினார்.

பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ் குறித்து:

பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ் என்பது, தொழில்முறை நிபுணத்துவமும், பயிற்சியும் பெற்ற நிபுணர்களைக் கொண்டு நவீன, உயர்தர உடல்நல சிகிச்சை சேவைகளை வழங்குகின்ற பன்முக சிறப்பு பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பிரபல மருத்துவமனையாகும்.

சென்னையில், வேளச்சேரி மற்றும் கொளத்தூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பிரசாந்த் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, இம்மாநகரில் சிறந்த சிகிச்சைக்கு சிறப்பாக அறியப்படும் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுள் ஒன்றாகும். நோயாளிகளுக்கு மிக நேர்த்தியான உடல்நல பராமரிப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவ நிலையமாக உருவாவதே இதன் தொலைநோக்கு திட்டமாகவும், குறிக்கோளாகவும் இருக்கிறது.

சிறந்த, தரமான சிகிச்சையை வழங்குவதன் மூலம் நோயாளிகளின் நம்பிக்கையை பெறுவது இம்மருத்துவமனை குழுமத்தின் செயல் இலக்காக இருக்கிறது. தரமான சிகிச்சை பராமரிப்பு, மரியாதை, உயர் செயல்திறன், சிகிச்சையின் பயனளிக்கும் தன்மை, பாதுகாப்பு, மக்கள் மத்தியில் ஆரோக்கியம் மீதான விழிப்புணர்வை உருவாக்குவது ஆகிய மதிப்பீடுகளைச் மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சார்ந்தே பிரசாந்த் சூப்பர்-ஸ்பெஷாலிட்டி எந்தவொரு நோய் பாதிப்பிற்கும் உரிய மருத்துவ பரிசோதனைகள், நோயறிதல்களுக்கும் மற்றும் அவைகளுக்குரிய ஸ்பெஷாலிட்டி சிகிச்சைகளுக்கும் பல்வேறு ஆரோக்கிய பராமரிப்பு தொகுப்பு திட்டங்களையும் பிரசாந்த் சூப்பர் ஹாஸ்பிட்டல்ஸ் வழங்கி வருகிறது.