September 28, 2024
  • September 28, 2024
Breaking News
September 26, 2024

சட்டம் என் கையில் திரைப்பட விமர்சனம்

By 0 178 Views

இதே தலைப்பில் கமல் நடித்து எண்பதுகளில் வெளியான படம், இப்போது காமெடி சதீஷ் ஹீரோவாக அதே தலைப்பில் ஆனால், வேறோரு கதையைக் கொண்டு உருவாகி இருக்கிறது.

த்ரில்லர் வகையறாவைச் சேர்ந்த இப்படத்தில் இயக்குனர் ஒன்றை மட்டும் தெளிவாக வைத்துத் திரைக்கதையை எழுதி இருக்கிறார். அது முன்பாதியில் ஒரு சில கிரைம்களைப் பின்னுவது… ஆடியன்ஸ் அவற்றை வைத்து என்னென்ன யூகிப்பார்கள் என்பதை இவர் யூகித்த அப்படி இல்லாமல் திரைக்கதையை நகர்த்திக் கொண்டு போவது.

அப்படி படத்தின் முன் பாதியில் கொடைக்கானலில் வசிக்கும் நாயகன் சதீஷ் பதக்கத்தோடு கார் ஓட்டிக்கொண்டு போகும் வேலையில் ஒரு பைக் மீது எடுத்து அதை ஓட்டி வந்தவர் மரணம் அடைகிறார். ஏற்கனவே பதட்டத்தில் இருக்கும் சதீஷ் இறந்தவரின் உடலை என்ன செய்வதென்று தெரியாமல் காரின் இடுக்கையில் போட்டுக்கொண்டு பயணப் படுகிறார்.

இன்னொரு பக்கம் அதே கொடைக்கானலில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிற எல்லா போலீசும் அயோக்கியர்களாக இருக்க, அதில் திரளான காவல் அதிகாரியாக இருக்கிறார் பாவல் நவகீதன். நியாயமோ அநியாயமோ கையில் சிக்கினால் அவ்வளவுதான் லட்டியை  எடுத்து உயிர் போகும் வரை அடிக்கிறார்.

இப்போது நாம் ஒரு வகையாக கதையை யோகிக்கிறோம் இப்படிப்பட்ட நவகீதனிடம் கண்டிப்பாக சதீஷ்க்குவார் என்பது தான் அது. அப்படி சிக்கும்போது திக்குவாய் கொண்ட சதீஷை நவகீதன் , அந்தக் குறையை வைத்து நக்கலடிக்க, நவகீதனை சதீஷ் அறைந்து விடுகிறார். 

ஏற்கனவே குரங்கு அதில் கல்லும் குடித்து விட்டால் என்ன ஆகும் என்கிற நிலையில் சதீஷை ஸ்டேஷனுக்கு அள்ளிக் கொண்டு போய் துவைத்து எடுக்க நினைக்கிறார் நவகீதன். பிணத்தை உள்ளே வைத்திருக்கும் சதீஷின் காரும் இப்போது போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு வரப்படுகிறது.

ஒரு இளம் பெண் பிணம் சாலையில் கிடைக்க அதைப்பற்றி அந்த ஸ்டேஷனுக்கு வரும் புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் அஜய் ராஜ் தலைமையில் போலீஸ் படை கிளம்புகிறது.

இந்த இரண்டு கொலைகளுக்கும் ஏதாவது காரணம் இருக்கிறதா தொடர்பு இருக்கிறதா? என்றெல்லாம் நாம் மண்டையைப் பிய்த்துக் கொள்ள அவசியமே இல்லாமல் பிரித்து மேய்ந்து அவரே ஒரு திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குனர்.

அது எப்படி எப்படியோ போய் எப்படி எப்படியோ முடிகிறது. 

வடிவேலு சந்தானம் சூரி வரிசையில் தானும் ஒரு நாயகனாகி விட வேண்டும் என்று ஆசைப்பட்ட சதீஷ் தொடர்ந்து அவருக்கான வேடங்களை ஏற்று நடத்து வருகிறார். ஆனால், ‘நடிக்கவும் ‘ வேண்டும் அல்லவா? அதில் தான் தவிர்த்துப் போய் தண்ணீர் குடித்து விடுகிறார்.

முரட்டுத்தனமான தோற்றத்துக்கு வாகனாக இருக்கிறது பாவெல் நவகீதனின் பாத்திரப் படைப்பு. அவரும் மிரட்டி விடுகிறார்.

அமைதியான போலீசாக இருந்தே அலற வைக்கிறார் காலம் சென்ற இ.ராமதாஸ். அவருடன் சேர்ந்து அமைதியான அட்ராசிட்டி போலீசாக வருகிறார் பவா செல்லத்துரை.

ஒன்று தாதாவாக வரவேண்டும் அல்லது போலீசாக வேண்டும் என்கிற இலக்கணப்படியே வரும் மைம்கோபி, இதில் இன்ஸ்பெக்டர் ஆகிறார். அந்த தாடியையும் மீசையையும் எந்த காலத்திலும் ஷேர் செய்ய முடியாது என்பதால் அவர் சபரிமலைக்கு மாலை போட்டு இருப்பதாக எளிதாக பிரச்சினையைத் தீர்த்து விடுகிறார் இயக்குனர். 

அவர் பதவிக்கு குறிவைக்கும் அஜய் ராஜின் வில்லத்தனமும் மிகையில்லாமல் இருக்கிறது. 

சதீஷின் தங்கையாக வரும் ரித்திகாவுக்கும், இன்னொரு கேரக்டரில் வரும் வித்யா பிரதீப்புக்கும் சின்னச் சின்ன வேடங்கள்.

எம் எஸ் ஜோன்சின் இசையும், பிஜே முத்தையாவின் ஒளிப்பதிவும் இந்த திரில்லர் கதைக்கு இன்னும் கூட உதவி இருக்க முடியும். 

சட்டம் என் கையில் – பாமர ரசிகர்களைக் கவரும் படம்.