August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • காமெடி சதீஷுக்கு கல்யாணம் பண்ணிவைத்த பி.ஜி.முத்தையா
December 12, 2018

காமெடி சதீஷுக்கு கல்யாணம் பண்ணிவைத்த பி.ஜி.முத்தையா

By 0 1097 Views

சினிமாவில் காதல் திருமணங்களை பெரும்பாலும் உடன் இருக்கும் கலைஞர்களேதான் நடத்தி வைப்பார்கள். அவை திடீரென்று நடைபெறும் திருமணங்களாக இருப்பதுண்டு.

இன்று காமெடி சதீஷ் அப்படி திடீர் திருமணம் செய்துகொண்டதாக வலைதளங்களில் செய்திகளும் புகைப்படங்களும் பரவின.

மாலையும், கழுத்துமாக இருக்கும் சதீஷ் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலிகட்ட, அருகில் பி.ஜி.முத்தையாவும், வைபவும் கல்யாணத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்த பலரும் சதீஷுக்கு வாழ்த்து சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

பிறகுதான் இது பி.ஜி.முத்தையா செய்து வைத்த செட்டப் கல்யாணம் என்பது தெரியவந்தது. ஷூட்டிங்குக்காக நடத்தப்பட்ட கல்யாணப் படத்தை இவர் எடுத்து ட்வீட் செய்துவிட அது சதீஷுக்கு ‘மொய்’ எழுத ஆரம்பிக்கும்வரை வைரலானது.

கடைசியில் குட்டு வெளிப்பட, தன் அப்பாவி முகத்துடன் சதீஷ் நிற்கும் புகைப்படத்தையும் முத்தையா வெளியிட்டார். எல்லாம் ஒரு பப்ளிசிட்டிதான்..!