April 19, 2025
  • April 19, 2025
Breaking News
November 19, 2021

தொரட்டி மாரிமுத்து இயக்கும் படத்தில் சசிகுமார்

By 0 404 Views

தனது யதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சசிகுமார். தற்போது பலரின் பாராட்டையும், சர்வதேச விருதுகளையும் பெற்ற ‘தொரட்டி’ படத்தின் இயக்குனர் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிக்கின்றார்.

Standard Entertainments சார்பாக G.M.டேவிட் ராஜ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம்.C.S இசையமைக்கிறார்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. தேனி, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் G.M.டேவிட் ராஜ் கூறினார்.