September 16, 2024
  • September 16, 2024
Breaking News
March 14, 2020

ரஜினி பற்றி பேச ஐந்து லட்சம் கேட்ட சரத்குமார்

By 0 533 Views

தேனி மாவட்டம் தேவாரத்தில் திருமண விழாவில் கலந்துகொண்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்தால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். இதில் உள்ள முக்கிய நுணுக்கங்களைப் படிக்கவேண்டும். அப்படி முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டால் களத்தில் இறங்கி போராட தயாராக உள்ளேன்’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவரிடம் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ‘யார் வேண்டுமானாலும் கட்சி துவக்கலாம். மக்கள் பிரச்னை குறித்து இந்த சரத்குமாரிடம் கேள்வி கேளுங்கள். அதை விடுத்து ரஜினி குறித்து கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் 5 லட்சம் ரூபாய் என் அக்கவுண்டில் போடுங்கள்’ என்றார்.

அட.. இது நல்லா இருக்கே?