கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் நடிச்சவர் வி. சேதுராமன். டாக்டரான இவர் ZI Clinic என்ற ஹாஸ்பிட்டலையும் நடத்தி வந்தார். அதே சமயம் கடந்த மார்ச் 26ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். 35 வயதே ஆன அவரின் உயிரிழப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த ZI Clinic மருத்துவமனையின் மற்றொரு பிரிவை அவர் உயிரோடு இருக்கும்போதே ஈ.சி.ஆர் சாலையில் கட்டிக்கொண்டிருந்தாராம். அந்த எக்ஸ்டன்ஷன் பில்டிங் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அவருடைய பிறந்த நாளான இன்று சந்தானம் திறந்து வைத்திருக்கிறார்.
Doctor Sethutamans Hospital
இதுகுறித்துசந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது அன்பான நண்பர் மருத்துவர் சேதுராமனின் பிறந்த நாளான இன்று சென்னை ஈ.சி.ஆரில் உள்ள அவரது ZI CLINIC மருத்துவமனையைத் திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று பதிவிட்டு, மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சேதுராமனின் கட்டவுட்டுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஷேர் செய்திருந்தார்.