July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பெண்கள் சந்திக்கும் சவால்களைச் சொல்லும் சங்கர்ஷனா
April 20, 2023

பெண்கள் சந்திக்கும் சவால்களைச் சொல்லும் சங்கர்ஷனா

By 0 277 Views

மஹிந்திரா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாச ராவ் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரித்துள்ள படம் “சங்கர்ஷனா”

இந்தப் படத்தில் சைதன்யா, நாயகனாக நடிக்க ரஷீதா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் சிவா, ஹரி, மது, பிரேம், எக்ஸ்பிரஸ் ஹரி ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை – ஆதித்யா ஸ்ரீராம்

கதை, திரைக்கதை, இயக்கம் – சின்னா வெங்கடேஷ்.

தயாரிப்பு – ஸ்ரீனிவாச ராவ்.

 

படம் பற்றி இயக்குனர் சின்னா வெங்கடேஷ் கூறியதாவது…

“இது முழுக்க முழுக்க பெண்களுக்கான படம். இன்றைய கால சூழ்நிலையில் பெண்கள் எப்படியான வாழ்க்கையை வாழ்கிறார்கள், சமூகத்தில் என்னமாதிரியான சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்த கதையை இருவாக்கி இருக்கிறோம்.

அதனால் தான் இந்த படத்தை தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் தயாரித்துதுள்ளோம்.

இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் படத்தை வெளியிட இருக்கிறோம்..!”