November 21, 2024
  • November 21, 2024
Breaking News
May 19, 2023

அப்போலோ மருத்துவமனையில் தழும்புகளற்ற RAHI ரோபாட்டிக் அறுவை சிகிச்சை..!

By 0 374 Views

இந்தியாவிலேயே முதன்முறையாக அப்போலோ மருத்துவமனையில் பெண்ணின் கழுத்து கட்டியை அகற்ற ரோபாட்டிக் RAHI தழும்புகளற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது..!

சென்னை, 19 மே 2023: சென்னை அப்போலோ மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதன்முறையாக 49 வயது பெண் ஒருவருக்கு கழுத்தில் எந்த வடுவும் ஏற்படாமல், உமிழ்நீர் சுரப்பியில் [salivary gland] இருந்த 8 செ.மீ அளவுள்ள மிகப் பெரிய கட்டி ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

அப்போலோ மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை பிரிவின் தலை மற்றும் கழுத்து புற்றுநோயியல் ரோபாட்டிக் மருத்துவ ஆய்வுத்துறையின் தலைவர் டாக்டர் சி வெங்கட் கார்த்திகேயன் [Dr Venkat Karthikeyan C, Clinical Lead Robotic ENT – Head and Neck Oncology at Apollo Main Hospital] அவர்கள் தலையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் இத்துறையில் வெற்றிகரமாக 125 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த மருத்துவ அறுவை சிகிச்சை சாதனை குறித்து டாக்டர் வெங்கட் கார்த்திகேயன் கூறுகையில், “கழுத்தின் வலது பக்கத்தில் மிகப் பெரிய கட்டி வெளியே தெரியும்படி இருந்த பெண் ஒருவர் அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார். மருத்துவ பரிசோதனையில் அவரது சப்மாண்டிபுலார் [submandibular]  எனப்படும் சுரப்பியில் சுமார் 8 செமீ அளவுக்கு கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நாட்டிலேயே முதன்முறையாக கழுத்தில் அறுவைச்சிகிச்சையின் தழும்புக்கள் ஏதும் ஏற்படமால் ரோபாட்டிக் அறுவை சிகிச்சை மூலம் அப்பெண்ணின் சப்மாண்டிபுலர் சுரப்பியில் இருந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது” என்றார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “காது மூக்குத் தொண்டைப் பிரிவில் ரோபாட்டிக் முறையிலான தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை என்பது தனிச் சிறப்பு வாய்ந்த துணைப் பிரிவாகும். இது தொண்டையில் உள்ள புற்றுநோய்க் கட்டிகளை அகற்றுவதற்கான டார்ஸ் (Trans Robotic Surgery) வகை அறுவைச்சிகிச்சையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கழுத்தில் உள்ள எவ்வித தழும்புகளும் ஏற்படாமல் அகற்றும் அறுவை சிகிச்சை (TORS)] வகை அறுவைச் சிகிச்சையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கழுத்தில் உள்ள கட்டிகளை எவ்வித தழும்புகளும் ஏற்படாமல் அகற்றும் அறுவை சிகிச்சை முறையான ரெட்ரோஆரிகுலர் ஹேர்லைன் இன்ஷிஷன் (Retroauricular Hairline incision (RAHI) முறை என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த முறையானது மிகப் பெரிய அளவில் உள் உறுப்புகளை உருபெருக்கிக் காட்டுவதாலும் மிகச் சிறப்பான முறையில் உடலின் அழகு எந்த விதத்திலும் பாதிக்கப்படாத வகையிலும் மேற்கொள்ளப்படுவதால் எண்டோஸ்கோபிக்  முறை சிகிச்சைக்கு மிகவும் உதவுகிறது. இதன் காரணமாக கழுத்தில் வெளியே தெரியும் பகுதியில் எந்தவித வடுக்களோ, தழும்புகளோ எற்படுவதில்லை” என்றார்.

தைராய்ட், பாரா தைராய்ட் சுரப்பிகளில் ஏற்படும் கட்டிகள், இணை உமிழ்நீர் சுரப்பி  அகற்றம், கழுத்தின் மென்மையான பகுதியில் ஏற்படும் வீக்கம் (benign neck swellinges) சுவாசக் குழாய் மூடியில் எற்படும் கட்டி (branchial cleft cyst) தலை மற்றும் கழுத்துப் பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நிணநீர் சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகளை அகற்றுவதற்காக கழுத்து பகுதியில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை (neck disseetion) போன்றவை மருத்துவரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த அறுவைச்சிகிச்சைகள் கட்டிகளை அகற்ற அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய சூழலில் இருக்கும் இளம் மற்றும் சமூகத்தில்’ ஊக்கத்துடன் செயல்பட்டு வருபவர்களுக்கு ஒரு மிகச் சிறந்த அறுவை சிகிச்சை முறையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் பற்றி..

 1983- ஆம் ஆண்டு சென்னையில் டாக்டர் பிரதாப் ரெட்டியால் முதலாவது மருத்துவமனை தொடங்கப்பட்டபோது சுகாதாரத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியது அப்போலோ. தற்போது உலகின் மாபெரும் ஒருங்கிணைந்த சுகாதாரப் பராமரிப்பு தளமாக விளங்கும் அப்போலோ 12,010க்கும் மேற்பட்ட படுக்கைகள், மருத்துவமனைகள் 30 மருந்தகங்கள். 400-க்கும் மேற்பட்ட கிளினிக்குகள் மற்றும் 7228-க்கும் அதிகமான நோயறியும் மையங்கள், 70க்கும் மேற்பட்ட டெலிமெடிசின் மையங்களைக் கொண்டுள்ளது 15-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்வி மையங்கள் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவையும் உள்ளன இவற்றில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அப்போலோ மருத்துவமனை முன்னணி, நவீன மருத்துவ முறைகளை நடைமுறைப்படுத்துவதில் முதலாவதாக திகழ்கிறது. தென்கிழக்கு ஆசியாவின் முதல் ப்ரோட்டான் சிகிச்சை மையத்தை சென்னையில் அப்போலோ மருத்துவமனை நிறுவியுள்ளது.

ஒவ்வொரு நான்கு நாட்களிலும் அப்போலோ மருத்துவமனை குழுமம் 10 லட்சம் மக்களை ஏதோ ஒரு வகையில் தொடுகிறது. இந்திய அரசாங்கம் அப்போலோ நினைவு தபால் [commemorative stamp) தலையை மருத்துவமனைக்காக வெளியிட்டுள்ளது. இது அரிதாக வழங்கப்படும் கவுரவம் ஆகும்.

மருத்துவமனை முறை அப்போலோ ஒன்றுக்கு இந்த கவுரவம் கிடைத்தது இதுவே முதல் மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மத்திய அரசு 2010-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் தரம் வாய்ந்த சிகிச்சைகளை வழங்குவதிலும், மருத்துவ கண்டுப்பிடிப்புகளை கண்டறிவதிலும், உலகத்தரம் வாய்ந்த க்ளினிக் சேவைகளை அளிப்பதிலும், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதிலும்  அப்போலோ தொடர்ந்து தனது தலைமைத்துவ இடத்தை தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. அப்போலோ குழுமம் உலக மருத்துவமனைகள் பட்டியலில் தரவரிசையில் முன்னணி இடம் வகிக்கிறது.