August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கோலிவுட் போல் பையனூர்வுட் முதற்கட்டமாக 1000 வீடுகள் -ஆர்கே செல்வமணி
February 17, 2020

கோலிவுட் போல் பையனூர்வுட் முதற்கட்டமாக 1000 வீடுகள் -ஆர்கே செல்வமணி

By 0 636 Views

சென்னை வடபழனி கமலா திரையரங்கில் தென்னந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி…

“திரைப்பட தொழிலாளர்களுக்காக ஒரு நகரத்தை உருவாக்க வேண்டும் என்ற எங்களுடைய 25 ஆண்டு கால கனவு நிறைவேறி உள்ளது…
பையனூரில் வழங்கப்பட்டுள்ள 50 ஏக்கர் நிலத்தில் 6 ஆயிரம் வீடுகள் கட்டவும், அதில் முதற்கட்டமாக ஆயிரம் வீடுகள் கட்ட முடிவு செய்துள்ளோம்..1” என்றார்.

தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைக்க திட்டமிட்டிருப்பதாக கூறிய அவர் 25 வருடங்களாக போராடி தற்போதுதான் கனவு நிறைவேறி இருப்பதாகவும் இதற்காக சங்க நிர்வாகிகளுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் ஸ்டுடியோவிற்கு வழங்கியுள்ள 15 ஏக்கரில் தற்போது இரண்டு ஸ்டுடியோக்கள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் ஸ்டுடியோக்கள் கட்ட திட்டமிட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கோடம்பாக்கம் எப்படி உருவானதோ அதேபோல் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பையனூர்வுட் என்ற திரைப்பட நகரமாக உருமாறும் என்ற ஆர்கே செல்வமணி, “தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் தேதி கேட்டு அன்றைக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெறும்..!” என தெரிவித்தார்.