July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கையில் கொப்புளம் வர திரைக்கதையை எழுதி முடித்த இயக்குனர்
September 28, 2020

கையில் கொப்புளம் வர திரைக்கதையை எழுதி முடித்த இயக்குனர்

By 0 552 Views

“ஆறு மாத காலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து சிந்தனை நசுக்கப்பட்டு தவித்திருந்தேன்.

இயற்கையின் அரவணைப்பில் 13 நாட்கள் இரவும் பகலும் ஓய்வின்றி இடைவிடாமல் எந்நாளும் எக்காலத்திற்கும் பேசப்படும் எனது அடுத்த படத்திற்கான ஒரு சிறந்த திரைக்கதையை தற்போது தான் எழுதி முடித்தேன்.

தொடர்ந்து பேனா பிடித்து எழுதியதில் விரலில் கொப்புளம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் மற்றொரு சிறந்த படைப்புக்கான திரைக்கதையை உருவாக்கம் செய்ய இருக்கிறேன்.

இரண்டு வாரங்களில் தூய்மையான காற்று, தூய்மையான நீர், இயற்கை உணவு இவைகளுடன் கூடிய சூழலில் இதை எழுதி முடித்திருக்கிறேன்.

கொரோனா காலத்தில் எனக்கான பணிகளில் பல முன்னேற்றத் தடைகள் இருந்தாலும் இரண்டு சிறந்த திரைக்கதைகள் கிடைக்க உள்ளன எனும் மகிழ்ச்சி அனைத்தையும் மறக்கச் செய்கின்றன..!”

என்று பதிவிட்டு இருப்பவர் யார் தெரியுமா…. திருவாளர் தங்கர்பச்சான்.