November 28, 2025
  • November 28, 2025
Breaking News
  • Home
  • Uncategorized
  • ரேகை ஜீ5 ஒரிஜினல் வெப் சீரிஸ் விமர்சனம்
November 26, 2025

ரேகை ஜீ5 ஒரிஜினல் வெப் சீரிஸ் விமர்சனம்

By 0 90 Views

எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய நாவல்களுக்கு தமிழ் கிரைம் எழுத்துலகில் தனி இடம் உண்டு. வாசகர்களால் ‘கிரைம் கதை மன்னன்’ என்றே அழைக்கப்படும் அவர் எழுதிய நாவல்களில் ஒன்று ‘ உலகை விலை கேள்’.

அந்த நாவலை அடியொற்றி அதன்  பாதிப்பில் zee 5 உருவாக்கியுள்ள வெப் தொடர் இது.

ராஜேஷ் குமாரின் அந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு தினகரன் எம் எழுதி இயக்கியுள்ள இத்தொடர் 7 எபிசோடுகள் கொண்டது.

இதன் கதையே வித்தியாசமானது. பொதுவாகவே ஒரு மனிதனின் ரேகை இன்னொரு மனிதனுடன் ஒத்துப்போகாது என்பது உலகறிந்த உண்மை.

இந்நிலையில் தொடர்ச்சியாய் கொலைகள் நடந்து கொண்டிருக்க, அவற்றைச் செய்வது யார்?  என்ற போலீஸ் விசாரணை போய்க் கொண்டிருக்கிறது.

இப்படியிருக்க, கொலை செய்யப்பட்டவர்களின் ரேகைகள் அனைத்தும் ஒரே விதமாக இருக்க, அது எப்படி சாத்தியம் என்பதுதான் கதையின் சுவாரசியம்.

போலீஸ் அதிகாரிக்காகவே பிறந்தவர் போலிருக்கிறார் நாயகன் பாலாஜி ஹசன். ஆக்ஷன் காட்சிகளில் காட்டும் தீரத்தில் மட்டுமல்லாமல், நடிப்பிலும் மிகக் குறைகளிலும் நேர்த்தியைக் காட்டி இருக்கிறார்.

காக்கிக்கேற்ற காலியாக நாயகியாக நடித்திருக்கும் பவித்ரா ஜனனிக்கும் போலீஸ் வேதமே வழங்கப்பட்டிருக்கிறது. அவரும் அதற்கான நியாயத்தை செய்திருக்கிறார்.

அஞ்சலிக்குள் இப்படி ஒரு வில்லியா என்று மிரள வைத்திருக்கிறது அவரது பாத்திரப் படைப்பும், நடிப்பும்.

எந்த வேடமானாலும் அந்தப் பாத்திரமாகவே மாறிவிடும் வினோதினி வைத்தியநாதன், கடைசிக்கடையாக் வெளிப்படுத்தும் தெனாவட்டான கெத்து மிரட்டல்.

மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் தங்கள் கேரக்டர்களுக்கான நியாயத்துடன் நடித்திருக்கிறார்கள்.

கிரைம் திரில்லராக ஆனதால் அதற்கான பதற்றத்துடன் பின்னணியில் இசைத்து காட்சிகள் வேகமெடுக்க உதவி இருக்கிறார் இசையமைப்பாளர் ஆர் எஸ் ராஜ்பிரதாப்.

மகேந்திரா எம் ஹென்றியின் ஒளிப்பதிவு தரம்.

சமீப காலங்களில் நாம் பார்த்திருக்கும் கிரைம் திரில்லர் படங்களைப் போன்ற திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் பரபரப்பான ட்ரீட்மென்ட்டுடன் நாம் பதற்றத்தை எகிற வைத்திருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் எம் தினகரன்.

ஜீ5 இன் வெற்றிகரமான தொடர்களில் ஒன்றாக இடம் பிடிக்க கூடிய இந்த க்ரைம் திரில்லர் தொடர், ஜீ5 ஓடிடி தளத்தில் நவ.28-ம் தேதி வெளியாகிறது.

இந்த வெப் தொடரை எஸ்.எஸ். குரூப் புரொடக் ஷன் சார்பில் எஸ்.சிங்காரவேலன் தயாரித்துள்ளார்.