January 1, 2026
  • January 1, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஜய் வீட்டில் புயலடிக்க நினைக்கும் ரைஸா வில்சன்
March 30, 2019

விஜய் வீட்டில் புயலடிக்க நினைக்கும் ரைஸா வில்சன்

வர வர படங்கள் எல்லாம் ஆபாசக் குப்பைகளாக மாறி வரும் நிலையில் நடிக நடிகையரும் எதைப் பேசுவது எதைப்பேசக் கூடாது என்று வரமுறை இல்லாமல் நடந்து கொள்வதாகவே தோன்றுகிறது. கடந்தவாரம் நயன்தாரா பற்றி ராதாரவி அவதூறாகப் பேசினார் என்றால் படத்துக்குள் நயன்தாராவே அப்படித்தான் ஆபாசமாகப் பேசுகிறார்.

அப்படித்தான் நாம் சொல்ல வரும் விஷயமும். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் எல்லார் வீடுகளிலும் நுழைந்த ரைஸா வில்சன், இப்போதுதான் மெல்ல மெல்ல படங்களில் ஹீரோயின் என்ற நிலையை எட்டிப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றுதான் புயல் வீச வைத்திருக்கிறது.

“யாரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள்..?” என்பதுதான் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி. அதற்கு அவர், “இளையதளபதி விஜய் அல்லது விஜய் தேவரகொண்டாவைத் திருமணம் செய்துகொள்ள ஆசை…” என்று கூறியிருக்கிறார். 

அவர் ஆசையை அவர் கூறியிருக்கிறார். இதில் வில்லங்கம் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்காக…. விஜய் காதலித்துத் திருமணம் புரிந்து இரண்டு குழந்தைகளுடன் அன்பான அழகான வாழக்கை வாழ்ந்து கொண்டிருப்பவர். அது தெரிந்தும் அவர் குடும்பத்தில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலையே இல்லாமல் ரைஸா பேசியிருப்பதுதான் தவறாக இருக்கிறது. 

இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் வளரும் ஒரு நடிகர், திருமணமான ஒரு நடிகையைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறினால் அது என்ன விளைவை அந்த நடிகையின் குடும்பத்தில் ஏற்படுத்தும்…? அதே போன்றதுதான் இதுவும். 

நாவடக்கம் நடிகைகள் விஷயத்திலும் வேண்டியிருக்கிறது..!