January 21, 2025
  • January 21, 2025
Breaking News
July 17, 2019

எப்படி இருந்த நான் – ராய் லக்ஷ்மி புதிய அவதாரம்

By 0 959 Views

நடிகர் நடிகைகளுக்கு பெரிய தலைவலியாக இருப்பது அவ்வப்போது பெருத்து விடும் உடல்தான். பிறகு பாடுபட்டு அதைக் குறைக்க முயற்சி எடுப்பார்கள்.

அப்படி இன்றைக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் பெருமுயற்சி செய்து குறைத்த தன் ‘ஸ்லிம் ஃபிட்’ உடலை… அதுவும் டூ பீஸ் உடையில் காட்டி தன் ரசிகர்களைக் குளிர வைத்திருக்கிறார் ராய் லக்ஷ்மி.

Raai Laxmi in New Avatar

Raai Laxmi in New Avatar

அந்தப்படத்துக்கான விளக்கத்தில் ‘கடுமையாக உழைத்து என் பிகினி உடலை நான் அடைந்து விட்டேன். நான் முன்பு எப்படி இருந்தேன் என்று இப்போது நினைத்தே பார்க்க முடியவில்லை. அவ்வப்போது எடையில் ஏறி, இறங்கி போராடிக் கொண்டிருந்த நான் இப்போது புதிய மனுஷியாக உணர்கிறேன்…” என்று புளகாங்கிதப்பட்டிருக்கிறார்.

அதில் முன்பு இருந்த எடை கூடிய படத்தையும், இப்போதைய ஸ்லிம் ஃபிட் உடலையும் ஒப்பீடு செய்யும் படத்தையும் வெளியிட்டு தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அவரது ரசிகர்களும் அதில் கிறங்கி கமெண்ட்டுகளால் லக்ஷ்மியை குஷிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையிலேயே ராய் லக்ஷ்மியின் முயற்சிக்குப் பாராட்டுக்கள். கீழே இருக்கும் படத்தைப் பாருங்க… ஆனா, அந்த சந்தோஷத்துல எடை கூடிடப் போகுது… பாத்தும்மா..!

Raai Laxmi New Look

Raai Laxmi New Look