July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ரா பார்த்திபனின் அடுத்த சாதனைப்படம் இன்று தொடக்கம்
January 1, 2020

ரா பார்த்திபனின் அடுத்த சாதனைப்படம் இன்று தொடக்கம்

By 0 754 Views

புதுமைப்பித்தன் என்று இன்று ஒருவரைச் சொன்னால் அது ரா.பார்த்திபனை மட்டும்தான். தன் படங்களில் ஏதாவது ஒரு புதுமையைச் செய்யும் அவரது வசனத்துக்கென்றே தமிழில் தனி அகராதி போடலாம்.

புதுமைகளைத் தாண்டி அவர் படைத்த சாதனையாக அமைந்தது அவர் கடைசியாக இயக்கி, நடித்து, தயாரித்த ‘ஒத்த செருப்பு.’ முழுப்படத்திலும் அவர் ஒருவரே நடித்து சாதனை படைத்த அந்தப்படம் பல விருதுகளையும் பெற்று வருகிறது. 

Iravin Nizhal Movie

Iravin Nizhal Movie

அதனைத் தொடர்ந்து அவர் இப்போது அடுத்த சாதனை முயற்சிக்குத் தயாராகியிருக்கிறார். இன்று தொடங்கும் அந்தப்படத்தின் தலைப்பு ‘இரவின் நிழல்’. இதில் என்ன புதுமை படைக்கப் போகிறார் அவர் என்கிறீர்களா..?

முழுப்படத்தையும் ஒரே ஷாட்டில் எடுத்து முடிக்கவிருக்கிறாராம். இது ஆசியாவிலேயே முதல்முறை என்கிறார்கள். ஆனால், ஏற்கனவே தமிழில் இப்படி ஒரு முயற்சி (அகடம் – 2014) நடந்திருப்பது அவருக்குத் தெரியுமா, தெரியாதா..?.