January 23, 2026
  • January 23, 2026
Breaking News
October 29, 2019

குழந்தை சுர்ஜித் உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி வீடியோ

By 0 939 Views

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தான். அதனைத் தொடர்ந்த மீட்புக் குழுவினரின் பல்வேறு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன 

கடைசி முயற்சியாக அருகில் மற்றொரு பெரிய ஆழ்துளை கிணறு தோண்டி, பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்கும் பணிகள் தொடங்கின. ஆனால், கடினமான பாறைகள் அதற்கு இடையூறாக இருந்தன.
 
இந்நிலையில், நேற்று (28-10-2019) இரவு 10.30 மணியளவிலிருந்து குழந்தையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை உயிரிழந்த‌தாகவும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
 
அதன்பின்னர் ஆழ்துளை கிணற்றில் 88 அடி ஆழத்தில் இருந்து குழந்தை சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
 
அங்கு பிரேத பரிசோதனை முடிந்து சுஜித் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனையில் வைத்து சுஜித்தின் உடலுக்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
 
இதையடுத்து சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து இன்று காலை கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
 
சிறுவன் சுர்ஜித் உடலுக்கு உறவினர்களும், ஆயிரக்கணக்கான பொது மக்களும் கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். மெழுகுவர்த்தி ஏற்றியும், பிரார்த்தனை செய்தும் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இதையடுத்து சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
 
அந்த வீடியோ கீழே…