October 29, 2025
  • October 29, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • திருடா திருடி, மன்மதன் படங்களின் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் திடீர் மரணம்
September 30, 2020

திருடா திருடி, மன்மதன் படங்களின் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் திடீர் மரணம்

By 0 824 Views

தனுஷ் நடித்த “திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் “, சிம்பு நடித்த “மன்மதன்” படங்களின் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் சற்று முன் காலமானார்…

விக்ரம் நடித்த கிங், தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சிம்பு நடித்த மன்மதன், ராம்குமார் மகன் நடித்த மச்சி, விவேக் நடித்த சொல்லி அடிப்பேன் போன்ற படங்களை தயாரித்தவர் எஸ் கே கிருஷ்ணகாந்த்.

லட்சுமி மூவி மேக்கர் நிறுவனத்தில் பல வெற்றிப்படங்களில் மேனேஜராக பணியாற்றியவர். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

தொடர் தோல்வியால் கடன் தொல்லைக்கு ஆளானவர்கள் வருடங்களாக சினிமா தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் சற்று முன் அவருக்கு திடீர் மாரடைப்பு என்று ஏற்பட்டது. வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அவரை சேர்ப்பதற்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பாக அவரது உயிர் பிரிந்தது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்.