July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் பிரபுதேவாவின் ‘ரேக்ளா’
January 26, 2022

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் பிரபுதேவாவின் ‘ரேக்ளா’

By 0 542 Views

ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவிருக்கும் புதிய படத்திற்கு ‘ரேக்ளா’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

‘வால்டர்’ படத்தை இயக்கிய இயக்குநர் அன்பு இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய படம் ‘ரேக்ளா’. இதில் கதையின் நாயகனாக பிரபுதேவா நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் டைட்டில் லுக்கை இன்று நடிகர் ஆர்யா வெளியிட்டார். படத்தில் பணியாற்றும் நடிகைகள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக உருவாகும் ‘ரேக்ளா’ படத்தின் டைட்டில் லுக், இணையவாசிகளிடமும், ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.