June 20, 2025
  • June 20, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தங்கர் பச்சான் மகன் விஜித்பச்சான் நாயகனாகும் பட முதல்பார்வை
February 21, 2024

தங்கர் பச்சான் மகன் விஜித்பச்சான் நாயகனாகும் பட முதல்பார்வை

By 0 320 Views

ரியோட்டா மீடியா தயாரிக்கும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘இசை ஞானி’ இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.  

பாலு மகேந்திராவின் ‘சினிமா பட்டறை’ மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜே. பி. தினேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ராமர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சரவணன் கவனித்திருக்கிறார். நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப் பற்றிய இந்த திரைப்படத்தை ரியோட்டா மீடியா படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது. 

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொண்டான்? என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடனும், சுவாரசியமான திருப்பங்களுடனும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.” என்றார். 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நாயகனும், நாயகியும் இந்த மண்ணின் அசலான காதலர்களைப் பிரதிபலிப்பதால்… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.