January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • குழந்தைகளையும் வெங்கட்பிரபுவின் பார்ட்டிக்கு அழைத்துப்போக சென்சார் அனுமதி
December 11, 2018

குழந்தைகளையும் வெங்கட்பிரபுவின் பார்ட்டிக்கு அழைத்துப்போக சென்சார் அனுமதி

By 0 1082 Views

வழக்கமாக குழந்தைகளை யாரும் ‘பார்ட்டி’க்கு அழைக்க மாட்டார்கள். ஆனால் வெங்கட் பிரபு அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். ஆம், வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்துக்கு சென்சார் உறுப்பினர்களால் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்த்து மகிழும் ஒரு அழகான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் ‘பார்ட்டி’.

இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா கூறும்போது, “வெங்கட் பிரபு பெரியவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நினைத்து மிகைப்படுத்தி எந்த படத்தையும் எடுத்ததில்லை. அவரது முந்தைய திரைப்படங்களைப் பார்த்தாலே இது மிகவும் தெளிவாக தெரியும், அவரின் இலக்கு எப்போதும் அனைத்து தரப்பு மக்களுக்குமான படத்தைத் தருவது தான்.

நிச்சயமாக, ‘பார்ட்டி’ படத்தின் கதை நடக்கும் பின்னணியால் படம் கிளாமர் விஷயங்களை கொண்டிருக்கும். சிபிஎஃப்சி உறுப்பினர்கள் எங்கள் படத்தின் முதல் பார்வையாளர்களாக இருந்து படத்தை சரியாக மதிப்பிட்டிருப்பது எங்கள் குழுவுக்கே மகிழ்ச்சியளிக்கிறது.

படத்தின் கதையைப் பற்றி தயாரிப்பாளர் டி சிவாவைக் கேட்டால், “கதையைப் பற்றிய எதையும் இப்போது வெளிப்படையாக கூறமுடியாது. ஆனால், ஒரு புத்தாண்டு கொண்டாத்தின் போது கதை நடக்கிறது. அதில் நிறைய கதாபாத்திரங்கள், ட்ராமா, ஆக்‌ஷன், காமெடி மற்றும் வெங்கட் பிரபுவின் பேக்கேஜ் நிச்சயமாக இருக்கும்..!” என்றார்.

‘பார்ட்டி’ படத்தில் சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், ஜெய், ஷாம், சிவா, சந்திரன், சம்பத் ராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரேம்ஜி அமரனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஒரு முழுமையான பார்ட்டி உணர்வை உருவாக்கியுள்ளது. ஃபிஜி தீவுகளை ராஜேஷ் யாதவ் தனது ஒளிப்பதிவால் மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். 

ஸோ… குடும்பத்துடன் ‘பார்ட்டி’க்குத் தயாராகலாம்..!