March 21, 2025
  • March 21, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஜய் சேதுபதியின் முதல் அரசியல் படத்தில் பார்த்திபன் கைகோர்க்கிறார்
July 8, 2020

விஜய் சேதுபதியின் முதல் அரசியல் படத்தில் பார்த்திபன் கைகோர்க்கிறார்

By 0 622 Views

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில், டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் “துக்ளக் தர்பார்”.

அரசியல் சார்ந்த கதைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அதற்கு உதாரணமாக ‘அமைதிப்படை’ தொடங்கி பல படங்களைக் கூறலாம். அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம்பெற தயாராகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’.

டெல்லி பிரசாத் தீனதயாளன் தனது இயக்குநர் பயணத்தை அரசியல் களம் மூலம் தொடங்குகிறார். எப்போதுமே ஹீரோ என்ற இமேஜுக்குள் சிக்காமல் இருக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

எதிலும் புதுமை விரும்பியான பார்த்திபன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘நானும் ரவுடிதான்’ படத்துக்குப் பிறகு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – பார்த்திபன் கூட்டணி இந்தப் படத்தின் இணைகிறது. இந்த கூட்டணி மீண்டும் வெற்றிக் கோட்டைத் தொட தயாராகி வருகிறார்கள்.

இதில் அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சுமார் 50% முடிவுற்றுள்ளது. இதர படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது.

Duglak Darbar Movie News

Duglak Darbar Movie News

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு, கோவிந்த் வசந்தா இசை என பிரம்மாண்ட கூட்டணியுடன் இந்தப் படம் தயாராகிறது.

‘துக்ளக் தர்பார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சன் டிவியின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும், ‘கோப்ரா’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சீயான் 60’ உள்ளிட்ட படங்களைப் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டுயோஸ் லலித் குமார் ‘துக்ளக் தர்பார்’ படத்தையும் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.