இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ” நடிகர் சூர்யாவை செருப்பால் அடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தருவதாக அறிவித்துள்ளார் ” என்கிற தகவல் வெளியாகிய உடன் அர்ஜுன் சம்பத்திற்கு எதிரான பதிவுகள் வரத் தொடங்கின.
இதையடுத்து, அர்ஜுன் சம்பத் அறிவிப்பிற்கு எதிராக, ” 1 லட்சம் அளிப்பதாக இருந்தால் அந்த வாய்ப்பை ஏழை மாணவனுக்கு அளிக்க தயார் ” என நடிகர் சூர்யா பதில் அளித்து உள்ளதாகவும் ஒரு செய்தி பரவத் தொடங்கியது.
இப்படி பரவிய தகவலுக்கு அர்ஜுன் சம்பத் தரப்பில் இருந்தே மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சூர்யா சொன்ன பதிலும் உண்மை இல்லை என்பது தெளிவாகியது.
உண்மை இவ்வாறு இருக்க தன் ஒத்த செருப்பு படத்தின் முதல் ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி தன் பட சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றி தெரிவித்த பார்த்திபன்,
“PIN குறிப்பு: லட்ச ரூபாய் போட்டியில் அடிக்கச் சொல்ல ஆள் இருக்கு, வாங்கிக் கொண்டு அதை ஒரு மாணவருக்கு வழங்கவும் உயர்ந்த மனமிருக்கு , நடுவில் ஒத்தாசைச் செய்ய இந்த ஒத்த செருப்பை பயன்படுத்தினால்…. அம்மாணவருக்கு கூடுதல் உதவித் தொகையாக
லட்சத்து ஒரு பைசாவை நானும் வழங்குவேன் என
இம்முதலாம் ஆண்டின் நினைவில் /மகிழ்வில் அறிவிக்கிறேன்…”
என்று அறிவித்து இருக்கும் பிரச்சினைகள் தானும் தனது ஒற்றை செருப்பை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார் ஆனால் மேற்படி தகவல்கள் பொய் என்று தெரிந்ததும், “இன்றைய என் பதிவில் ‘செருப்புச் செய்தி’ ஆதாரமற்றது என நண்பர் வெங்கட் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்படியிருப்பின் ஊர்ஜிதப் படுத்திக்கொள்ளாமல் மேல்bet கட்டியதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்று தெரிவித்து பிரச்சினையில் இருந்து ஜகா வாங்கினார்.
ஆக அனைத்துமே டைம்பாஸ் ஆகிப்போனது..!