October 5, 2024
  • October 5, 2024
Breaking News
February 24, 2023

அப்போலோ மருத்துவமனையில் தோள்பட்டை நோய்க்கு ஒரே தள சிகிச்சை

By 0 347 Views
  • அப்போலோ மருத்துவமனை இறுக்கமான தோள்பட்டை நோய்க்கான சிகிச்சையில் சிறப்பு கவனம் செலுத்துகிறது: ஒரே தளத்தில் சிறப்பு சிகிச்சை அளிப்பதற்கான மையத்தைத் தொடங்கியுள்ளது அப்போலோ…
  • 70 சதவீதம் பேர் தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது தோள்பட்டை வலியை உணர்கிறார்கள்…

சென்னை, 24 பிப்ரவரி 2023: விளையாட்டு வீரர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் நடுத்தர வயதுடையவர்களுக்கான சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, இறுக்கமான அல்லது உறைந்த தோள்பட்டை எனப்படும் ஃப்ரோஸென் ஷோல்டர் (Frozen shoulder) பாதிப்பு உள்ளவர்களுக்கு மேம்பட்ட சிகிச்சைகளை அப்போலோ மருத்துவமனை அளிக்கிறது. இறுக்கமான தோள்பட்டை பாதிப்பினால் அவதியுறூபவர்களுக்கு இந்த பகுதியாக மருத்துவமனை, அப்போலோ ஹைட்ரோடைலேட்டேஷன் (hydrodilatation) எனப்படும் அறுவைசிகிச்சை அல்லாத கதிரியக்க சிகிச்சை முயற்சியின்ன் ஒரு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதுகுவலிக்கு அடுத்தபடியாக தோள்பட்டை வலிதான், எலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் இரண்டாவது முக்கியப் பிரச்சினையாக இருந்து வருகிறது. 70 சதவீத மக்கள் தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது தோள்பட்டை வலியை உணர்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. தோள்பட்டை மூட்டில் வலி மற்றும் சுலபமாக கைகளை பயன்படுத்த முடியாத அளவுக்கு விறைப்பு உண்டாவதால் வெளிப்புற சுழற்சி இயக்கத்தில் தடை ஏற்படும். இறுக்கமான தோள்பட்டை நோய்க் குறைபாட்டிற்கு இது பொதுவான அறிகுறியாகும். ஆனால் தோள்பட்டை வலிக்கான காரணங்கள் மாறுபட்டவை.

சிகிச்சை அறிகுறிகளைக் கண்டறிந்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய, இறுக்கமான தோள்பட்டைக்கான சிகிச்சை எனப்படும் பகுதியாக பிசியோதெரபி இயன்முறை திட்டத்தின் ஒருங்கிணைந்த பரிந்துரைக்கப்படுகிறது. அறிகுறிகள் தொடர்ந்தால், மருத்துவர்கள் ஹைட்ரோடைலேஷன் எனப்படும் கதிரியக்க சிகிச்சை [radiological intervention] முறையை மேற்கொள்கிறார்கள்.

இந்த குறுகிய கால அளவில், பகல்நேர சிகிச்சை முறையாகும். இச்சிகிச்சை சென்னை அப்போலோ ஒரே தளத்தில் அளிக்கும் மருத்துவமனையில் உள்ள தோள்பட்டை தொடர்பான சிகிச்சைகளை தோள்பட்டை சிகிச்சைக் கிளினிக்கில் [One Stop Shoulder Clinic] வழங்கப்படுகிறது. இதுவரை, 25 நோயாளிகள் இந்த சிகிச்சை முறைக்கு உட்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. Shoulder Scores] 12-ல் இருந்து 42 ஆக அவர்களின் ஆக்ஸ்போர்டு தோள்பட்டை மதிப்பெண் [Oxford உயர்ந்துள்ளது. ஆக்ஸ்போர்டு ஷோல்டர் ஸ்கோர் (OSS) என்பது தோள்பட்டை நோயால் ஏற்படும் வலி மற்றும் இயலாமையின் அளவை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் மதிப்பீட்டு முறையாகும்.

அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் பிரீதா ரெட்டி (Preeta Reddy, Vice Chairperson, Apollo Hospitals Group) இது குறித்துக் கூறுகையில், “நோயாளிகளுக்கு இறுக்கமான தோள்பட்டை அளிக்கும் வகையில் இந்த சிகிச்சையை வழங்குவதில் நாங்கள் பிரச்சினைக்கு நிவாரணம் மகிழ்ச்சியடைகிறோம். நோயாளிகள் மன மற்றும் உடல் வலிகள் இல்லாத நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்த முயற்சி அதற்கான அடுத்தக்கட்டமாகும்.. தொழில்நுட்பம் மற்றும் பராமரிப்பு முறைகளை இணைத்து, சிகிச்சைக்கான விரிவான அணுகுமுறைகளை மேற்கொள்ளும் எங்கள் சுகாதார நடைமுறைகள் தொடரும்” என்றார்.

அப்போலோ மருத்துவமனையின் எலும்பியல், தோள்பட்டை மற்றும் முழங்கை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி சிவராமன் (B Sivaraman, Orthopaedic Shoulder and Elbow Surgeon, Apollo Hospitals) கூறுகையில், “இறுக்கமான தோள்பட்டை சிக்கலை அனுபவிக்கும் நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை முறை குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்படும், அறுவை சிகிச்சை இல்லாத மற்றும் செலவு குறைந்த சிகிச்சை முறையாகும். இந்தச் சிகிச்சை நடைமுறையின் போது, அல்ட்ராசவுண்ட் எனப்படும் புறவொலி அல்லது மீயொலி வழிகாட்டுதலின் கீழ் தோளில் உள்ள காப்ஸ்யூலில் (இறுக்கமாகவும் உறைந்ததாகவும் இருக்கக் கூடிய தோள் காப்ஸ்யூல்) 100 முதல் 150 மில்லி சாதாரண கரைசலை (normal saline] நாங்கள் செலுத்துகிறோம். இந்த சிகிச்சை முறையை நாங்கள் அனஸ்தீஸியா கொடுக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்கிறோம் (மயக்க மருத்துவர் சுமதி சங்கர் வழங்குவது). இந்த சிகிச்சை 360 டிகிரியிலும் காப்ஸ்யூலை விரிவாக்க உதவுகிறது. இதன் மூலம் மேம்பட்ட தோள்பட்டை செயல்பாடு மற்றும் கைகளை முன்,பின்,மேல் பகுதிகளில் இயக்கத்தைப் பெற முடிகிறது. எங்களிடம் வரும் நோயாளிகள் சிகிச்சைக்குப் பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளனர் என்பதையும், எங்களின் சிகிச்சைகள் அறுவை சிகிச்சையைத் தவிர்க்க உதவியது என்பதையும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

பலவிதமான தோள்பட்டை பிரச்சனைகளுக்கு இந்த சிகிச்சை மையம் விரைவான மற்றும் நல்ல பலன்களை அளிக்கும் தீர்வுகளை வழங்குகிறது. மருத்துவமனைக்கு அடிக்கடி வரவேண்டிய அவசியம் இல்லாமல் ஒரு சில முறை மட்டும் வருகை தந்தால் போதுமானது மற்றும் நோயாளிகளின் மன திருப்தி இவை இரண்டும் இந்த சிகிச்சையின் முக்கிய பலன்களாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போலோ மருத்துவமனை தோள்பட்டை மற்றும் முழங்கை பிரச்சினைகள் குறித்த தொடர் மருத்துவக் கல்வித் திட்டத்தை [(CME) Continuous Medical Education programme] 25 பிப்ரவரி 2023 அன்று பொது மருத்துவர்களுக்கு வழங்குகிறது. டாக்டர் பி சிவராமன் மற்றும் மூத்த இயன்முறை மருத்துவர் (பிசியோதெரபிஸ்ட்) முரளி எம்பிடி ஆகியோர் ஆசிரியர் குழுவில் இடம்பெற்று இந்த கல்வித் திட்டத்தை வழங்குகிறார்கள்.

அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் பற்றி..:

சென்னையில் 1983-ம் ஆண்டு அப்போலோ மருத்துவமனை முதன்முதலாக டாக்டர் பிரதாப் ரெட்டியால் தோற்றுவிக்கப்பட்டது. ஆசியாவின் மிகப் பெரிய மற்றும் மிக நம்பகமான மருத்துவ குழும்மாக அப்போலோ குழுமம் திகழ்கிறது. தற்போது 72 மருத்துவமனைகளில் 12000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. 4100 மருந்தகங்கள், 120 ஆரம்ப சிகிச்சை மையங்கள் மற்றும் 650 பரிசோதனைக் கூடங்களும் உள்ளன. 700 க்கும் மேற்பட்ட தொலை மருத்துவ மையங்களும் உள்ளன. 15-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்வி மையங்கள் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவையும் உள்ளன. இவற்றில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆய்வு நிறுவனத்தில் உலக அளவிலான மருத்துவ சேவை சோதனை முயற்சிகள், ஸ்டெம் செல் ஆராய்ச்சி, மரபணு ஆய்வு உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்போலோ மருத்துவமனை பல முன்னணி, நவீன மருத்துவ முறைகளை நடைமுறைப்படுத்துவதில் முதலாவதாக திகழ்கிறது. ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆ,ஸ்திரேலிய பகுதிகளிலேயே முதலாவதான ப்ரோட்டான் சிகிச்சை மையத்தை சென்னையில் அப்போலோ மருத்துவமனை நிறுவியுள்ளது.

ஒவ்வொரு நான்கு நாட்களிலும் அப்போலோ மருத்துவமனை குழுமம் 10 லட்சம் மக்களை ஏதோ ஒரு வகையில் தொடுகிறது. இந்திய அரசாங்கம் அப்போலோ மருத்துவமனைக்காக நினைவு தபால் தலையை வெளியிட்டுள்ளது. இது அரிதாக வழங்கப்படும் கவுரவம் ஆகும். மருத்துவமனை ஒன்றுக்கு இந்த கவுரவம் கிடைத்தது இதுவே முதல் முறை அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மத்திய அரசு 2010-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

கடந்த 38 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையை வழங்குவதில் அப்போலோ முன்னணி வகிக்கிறது. அப்போலோ குழுமம் உலக மருத்துவமனைகள் பட்டியலில் தரவரிசையில் முன்னணி இடம் வகிக்கிறது.

அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் பற்றி:

சென்னையில் 1983-ம் ஆண்டு அப்போலோ மருத்துவமனை முதன்முதலாக டாக்டர் பிரதாப் ரெட்டியால் தோற்றுவிக்கப்பட்டது. ஆசியாவின் மிகப் பெரிய மற்றும் மிக நம்பகமான மருத்துவ குழும்மாக அப்போலோ குழுமம் திகழ்கிறது. தற்போது 72 மருத்துவமனைகளில் 12000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. 4100 மருந்தகங்கள், 120 ஆரம்ப சிகிச்சை மையங்கள் மற்றும் 650 பரிசோதனைக் கூடங்களும் உள்ளன. 700 க்கும் மேற்பட்ட தொலை மருத்துவ மையங்களும் உள்ளன. 15-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்வி மையங்கள் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவையும் உள்ளன. இவற்றில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.. அப்போலோ மருத்துவமனை பல முன்னணி, நவீன மருத்துவ முறைகளை நடைமுறைப்படுத்துவதில் முதலாவதாக திகழ்கிறது. ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆ,ஸ்ரேலிய பகுதிகளிலேயே முதலாவதான ப்ரோட்டான் சிகிச்சை மையத்தை சென்னையில் அப்போலோ மருத்துவமனை நிறுவியுள்ளது.

ஒவ்வொரு நான்கு நாட்களிலும் அப்போலோ மருத்துவமனை குழுமம் 10 லட்சம் மக்களை ஏதோ ஒரு வகையில் தொடுகிறது. இந்திய அரசாங்கம் அப்போலோ மருத்துவமனைக்காக நினைவு தபால் தலையை வெளியிட்டுள்ளது. இது அரிதாக வழங்கப்படும் கவுரவம் ஆகும். மருத்துவமனை ஒன்றுக்கு இந்த கவுரவம் கிடைத்தது இதுவே முதல் முறை. அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மத்திய அரசு 2010-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

கடந்த 38 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் தரம் வாய்ந்த சிகிச்சைகளை வழங்குவதிலும், மருத்துவ கண்டுப்பிடிப்புகளை கண்டறிவதிலும் உலகத்தரம் வாய்ந்த க்ளினிக் சேவைகளை அளிப்பதிலும், நவீன பயன்படுத்துவதிலும் அப்போலோ மருத்துவமனை தொடர்ந்து தன் தலைமைத்துவ இடத்தைத் தக்கவைத்து வருகிறது.

அப்போலோ குழுமம் உலக மருத்துவமனைகள் பட்டியலில் தரவரிசையில் முன்னணி இடம் வகிக்கிறது.