March 24, 2025
  • March 24, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மாதவன் நடித்த எவனோ ஒருவன் இயக்குனர் 50 வயதில் மரணம்
August 17, 2020

மாதவன் நடித்த எவனோ ஒருவன் இயக்குனர் 50 வயதில் மரணம்

By 0 582 Views

‘டோம்பிவில்லி ஃபாஸ்ட்’ என்கிற மராத்திய திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தை தொடங்கியவர் நிஷிகாந்த்.

இந்த படத்தை தமிழில் மாதவனை கதாநாயகான வைத்து ‘எவனோ ஒருவன்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

இதனை தொடர்ந்து, ‘மும்பை மேரி ஜான்’, ‘ஃபோர்ஸ்’ (காக்க காக்க ரீமேக்), ‘லாய் பாரி’ (மராத்தி), ‘த்ரிஷ்யம்’ (இந்தி ரீமேக்) என அடுத்தடுத்து பல்வேறு படங்களை இயக்கி வெற்றிநடைப்போட்டார்.

தற்போது தர்பதர் என்ற திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்னை காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நிஷிகாந்த் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.