October 16, 2025
  • October 16, 2025
Breaking News
August 13, 2020

கொரோனா பாதித்த நிக்கி கல்ராணியின் அனுபவங்கள்

By 0 689 Views

கொரோனா பாதிப்பில் இது நட்சத்திரங்களின் சீசன் போலிருக்கிறது இந்தியா முழுவதிலும் அனேக சினிமா நட்சத்திரங்களையும் அரசியல் நட்சத்திரங்களையும் தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.

அந்தவகையில் தமிழ் தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நிக்கி கல்ராணி யையும்  கொரோனா விட்டு வைக்கவில்லை. அவர் தனது அனுபவங்களை இப்படி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

“கடந்த வாரம் நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது அது எனக்கு பாசிட்டிவ்வான ரிசல்ட தந்தது. மற்ற கொரோனா நோயாளிகளை போலவே எனக்கும் லேசான காய்ச்சல், தொண்டை கரகரப்பு, வாசனை அற்ற தன்மை மற்றும் ருசி அறிய முடியாத தன்மை இருந்தது.

நல்லவேளை நான் எனது வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொள்ள முடிந்தது. அத்துடன் என் வயதும் இதற்கு ஒத்துழைக்க மேலும் எந்த பிரச்சனையும் வராமல் இருந்தது. நான் குணமடைந்து கொண்டு வருகிறேன்.

Nikki Galrani affected by Covid 19

Nikki Galrani affected by Covid 19

ஆனால் இது என் பெற்றோருக்கு மற்றும் வயதில் பெரியவர்களுக்கு வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது.

எனவே, அனைவருமm கண்டிப்பாக மாஸ்க் அணிந் கொள்ளுங்கள். கைகளை அடிக்கடி சோப்புப் போட்டு கழுவுங்கள். சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள்…” 

இவ்வாறு கூறியிருக்கிறார் நிக்கி கல்ராணி.