அமெரிக்க வேர்ல்ட் டமில் யுனிவர்சிட்டி தனக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாக குஷ்பூ ட்விட்டரில் பதிவிட்ட நிலையில், அது போலியான பட்டம் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
முனைவர் பட்டம் பெற பி.எச்.டி படிக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் சாதனையை பாராட்டி அந்த பட்டத்தை வழங்க வேண்டும்.
குஷ்புவுக்கு கொடுக்கப்பட்டுள்ள முனைவர் பட்டம் ஒரு அங்கீகாரம் இல்லாத பல்கலைக்கழத்தினுடையது என்று அந்த பல்கலைக்கழகத்தின் வலைதளத்திலேயே தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம்.
அரசால் அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட முனைவர் பட்டத்திற்கு இத்தனை அலப்பறை தேவைதானா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
படித்து முனைவர் பட்டம் பெற வேண்டும் அல்லது சமூதாயத்திற்கு தொண்டாற்றி கெளரவ முனைவர் பட்டம் பெற வேண்டும் என குஷ்புவுக்கு அட்வைஸும் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.