March 22, 2025
  • March 22, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஜய் ரஜினி அடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் நடிக்கும் நயன்தாரா
November 11, 2019

விஜய் ரஜினி அடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் நடிக்கும் நயன்தாரா

By 0 854 Views

ஆண் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல… லேடி சூப்பர் ஸ்டாரும் எந்த நேரத்தில் எப்படி முடிவெடுப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஷங்கர் படத்தில் பிரமாண்டமாக நடித்துக் கொண்டிருந்தபோதே பா.ரஞ்சித்துடனும் ஒரு படம் அல்ல… இரண்டு படங்கள் நடித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

அப்படி லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா எடுத்திருக்கும் ஒரு புது முடிவும் இப்போது செய்தி கேட்டவர்களை வாய் பிளக்க வைத்திருக்கிறது. 

இன்றைக்கும் உச்ச நட்சத்திரங்கள் தவிர்க்க இயலாத இடத்தில் இருக்கிறார் நயன்தாரா. அது அஜித் ஆகட்டும், விஜய் ஆகட்டும், ரஜினி ஆகட்டும் அவர்களது படங்களில் வரிசையாக ஹீரோயின் ஆனவர், இப்போது அடுத்த படத்தில் ஆர்ஜே பாலாஜியுடன் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல்தான் அது.

Mookkuthi Amman Nayanthara

Mookkuthi Amman Nayanthara

‘எல்கேஜி’ படத்தில் நாயகனாக நடித்ததுடன் படத்தின் திரைக்கதையையும் எழுதிய ஆர்ஜே பாலாஜி அடுத்து நடிக்கும் படம் தொடங்கவிருக்கிறது. அதையும் எல்கேஜி தயாரிப்பாளரான வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷே தயாரிக்கிறார்.

‘மூக்குத்தி அம்மன்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்தப்படத்தில் ரஜினியின் ‘தர்பார்’ படத்துக்குப் பின் நயன்தாரா நடிக்கவிருக்கிறார். ஆர்ஜே பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி என்.ஜெ.சரவணனுடன் இணைந்து இயக்கி நடிக்கவும் செய்யும் அந்தப் படத்தில் முக்கிய வேடமும் ஏற்கிறார்.

ஆர்ஜே பாலாஜி சொன்ன கதை தவிர்க்கவே முடியாமல் நயன்ஸை ‘ஓகே’ பண்ண வைத்து விட்டதாம்.

டைட்டிலைப் பார்த்தால் கேஆர் விஜயாவுக்குப் பின் நயன்ஸுக்கு அம்மன் வேஷம் போட்டுவிடுவாரோ ஆர்.ஜே.பாலாஜி..?