October 27, 2025
  • October 27, 2025
Breaking News
January 30, 2020

திடீர் திருப்பமாக நாளை வெளியாகிறது நாடோடிகள் 2

By 0 643 Views
நாளை ஜனவரி 31 அன்று வெளியாவதாக இருந்த நாடோடிகள் 2 வழக்கு நீதிமன்றத்தில் இருந்ததால் நாளை வெளியாவதில் சிக்கல் நீடித்தது.  என்ன பிரச்சினை..?
 
எம்.எம்.பைனான்ஸ் என்ற நிறுவனம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நாடோடிகள் 2 படத்தின் தமிழகம், புதுச்சேரி விநியோக உரிமையை எனக்கு தருவதாக தயாரிப்பாளர் நந்தகோபால் 5.25 கோடிக்கு ஒப்பந்தம் போட்டார். ரூ..3.5 கோடி பணமும் பெற்றுள்ளார். ஆனால் இப்போது வேறு ஒரு நிறுவனம் மூலம் படத்தை வெளியிடுகின்றனர்.
 
நான் மீதி பணத்தை தருகிறேன் என்று கூறியும் ஒப்பந்தத்தை மீறி அவர் செயல்படுகிறார். எனவே இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கும் நீதிபதி பி.கே.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது.
 
படம் வெளியாக இடைக்கால தடை விதித்த நீதிபதி, தயாரிப்பாளர் நந்தகோபால் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார். இதன்மூலம் நாடோடிகள் 2 படம் வெளியாகாது என்று கருதப்பட்டது.
 
இந்நிலையில் திடீர் திருப்பமாக நாஆளை படம் வெளியாகும் என்று நந்தகோபால் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
 
எப்படியோ வெளியானால் சரி… வாழ்த்துகள்..!