நாயகன் தினேஷ் ஒரு 90’ஸ் கிட். டாட்டூ போடும் கடை நடத்தி வரும் அவருக்கு டு திருமணம் முடிக்க அவரது நண்பர்களான கதிர், ஆதித்யா, செல்வா மூவரும் தீவிரமாக பெண் தேடுகிறார்கள்.
இதற்கிடையில் நாயகி தீப்தியை ஒரு பிரச்சினையில் இருந்து காப்பாற்றும் தினேஷ் அவர் மீது காதலாக, காதலே பிடிக்காத தீப்தி, தினேஷ் காதலை ஏற்காமல் லண்டன் சென்றுவிடுகிறார்.
தினேஷ் அண்ட் கோ அங்கும் அவரை விரட்டிச் சென்று தன் தீப்தியின் காதலை பெற முயற்சிக்க தீப்தி ஒரு அதிர்ச்சியான முடிவை எடுக்கிறார். அதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.
தினேஷின் இயல்பே அவர் 90’ஸ் கிட்ஸ் தான் என்று நம்ப வைக்கிறது. தீப்தி அவரை வெறுத்தாலும் அதைப்பற்றி கவலை கொள்ளாமல் அவரைத் திருத்துவதில் நமக்கு வெறுப்பு ஏற்படுகிறது.
தீப்தி ஏன் காதலை வெறுக்கிறார் என்பதற்கான வலுவான காரணம் இல்லை. தீப்தி அழகாக தோற்றமளித்தாலும் தினேஷை விட உயரம் அதிகமாக இருப்பதால் இருவருக்குமான பொருத்தம் மிஸ்ஸிங்.
தினேஷின் நண்பர்களாக வரும் கதிர், ஆதித்யா, செல்வா மூவரும் படத்தை கலகலப்பாக நகர்த்த முயற்சி செய்தாலும் படம் மெதுவாகவே நகர்கிறது. மொட்ட ராஜேந்திரன், மனோபாலா இருந்தும் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்கிறது.
ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையும், ஆனந்த்ராஜின் ஒளிப்பதிவும் லண்டன் எபிசோடுக்கு பொருத்தமாக இருக்கின்றன. நட்பும் காதலும் இருக்கும் கதையில் காட்சிகள் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கலாம்.
காதல், அதில் மோதல், வெளிநாடு துரத்தல் என்ற சுவாரசியமான லைனை தேர்ந்தெடுத்து இருந்தாலும் இயக்குனர் ஆர்.கோபி திரைக்கதையில் இன்னும் அழுத்தம் சேர்த்திருந்தால் படத்தை முழுமையாக ரசித்திரக்க முடியும்.
தனியாகவே வாழ முடிவெடுக்கும் தீப்தி அப்படி ஒரு அதிர்ச்சிகரமான முடிவுக்கு போவதில் எந்த விதமான அழுத்தமும் இல்லை. அதை நியாயப்படுத்தவும் இன்னும் நம்பகத் தன்மையை ஏற்படுத்தி இருக்க முடியும்.
நானும் சிங்கிள்தான் – 90’ஸ் கிட்ஸின் நட்பும் காதலும்..!
Related