August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • Uncategorized
  • தமிழ் தேசிய குறியீட்டுப்படம் நான்கு கில்லாடிகள்

தமிழ் தேசிய குறியீட்டுப்படம் நான்கு கில்லாடிகள்

By on June 29, 2019 0 714 Views

குங்குமபூவும் கொஞ்சும்புறாவும்”, “வானவராயன் வல்லவராயன்”, “ருக்குமணி
வண்டிவருது”, படங்களுக்கு பிறகு காக்டெயில் சினிமாஸ் நிறுவனத்திற்காக
இயக்குனர் இராஜமோகன் இயக்கும் புதிய படம் “நான்கு கில்லாடிகள்”. இது ஒரு
தமிழ் தேசிய குறியீட்டு படமாக உருவாகி வருகிறது. உண்மை சம்பவத்தை
அடிப்படியாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு கதையை இராஜமோகன்
மற்றும் சிவக்குமார் இணைந்து எழுத, இராஜமோகன் திரைகதை, வசனம் எழுதி
இயக்கியுள்ளார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தேனி, இடுக்கி, பெரியகுளம்,
மூனாறு, ஆகிய இடங்களில் நடந்துமுடிந்தது. இப்படத்தின் இரண்டாம்கட்ட
படபிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இத்திரைபட்தில்
இசக்கிபரத், அறிமுக நாயகி தியா, டேனியல், தம்பி ராமையா, கோவை சரளா,
A.வெங்கடேஷ், காதல் சரவணன் மற்றும் மெட்ராஸ் நந்தகுமார், இயக்குனர்
நாகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக முன்னணி கதாநாயகன்
ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருகிறது. இபடத்திற்கு கிரிஷ்
கோபாலகிருஷ்ணன் இசையமைக்க, ராஜ்குமார் ஒளிபதிவாளராக
அறிமுகமாகிறார்.