March 28, 2023
  • March 28, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • துப்பறிவாளன் 2 ல் விஷால் சாட்டிலைட்டில் இருந்து குதிக்கும் காட்சி மிஷ்கின் நக்கல்
February 26, 2020

துப்பறிவாளன் 2 ல் விஷால் சாட்டிலைட்டில் இருந்து குதிக்கும் காட்சி மிஷ்கின் நக்கல்

By 0 504 Views

விஷால் தயாரித்து நடிக்க சைக்கோ மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வந்த ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

லண்டனில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இந்த படத்தை முடிக்க மேலும் ரூபாய் 40 கோடி விஷாலிடம் மிஸ்கின் கேட்டதாகவும் இதனை அடுத்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து மிஸ்கின் விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மீதமுள்ள படத்தை விஷாலே இயக்குவார் என்று கூறப்பட்டது. இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மிஸ்கின் ’நான் விஷாலிடம் 40 கோடி கேட்டதாக வெளிவந்த தகவலில் உண்மையில்லை. உண்மையில் நான் அவரிடம் ரூ. 400 கோடி கேட்டேன். இதுவரை படமாக்கப்பட்ட 50% சதவீத படப்பிடிப்புக்கு 100 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. மீதமுள்ள காட்சிகளை படமாக்க வேண்டும் என்றால் 400 கோடி ரூபாய் தேவை.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஷால் சேட்டிலைட்டில் இருந்து குதிக்கும் படியான காட்சிகள் அமைக்க திட்டமிட்டு இருந்தேன். அதற்கு மட்டுமே ரூபாய் 100 கோடி செலவாகும். எனவே மொத்தம் 400 கோடி நான் அவரிடம் கேட்டேன்…” என்று கிண்டலாக பதில் கூறியுள்ளார்.

இந் நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த விஷால் ’மீதமுள்ள படத்தை நானே இயக்கப் போவதாக வெளிவந்துள்ள செய்தி உண்மைதான்’ என்றிருக்கிறார்.