August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தாய்லாந்தில் கவர்ந்த மிஸ்டர் சந்திரமௌலி படக்குழு..!
March 20, 2018

தாய்லாந்தில் கவர்ந்த மிஸ்டர் சந்திரமௌலி படக்குழு..!

By 0 987 Views

‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்கிற வசீகரத் தலைப்பு கொண்ட படத்தை போப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் ‘கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கின்றது.

கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசாண்டரா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சந்தோஷ் பிரதாப், இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், சதிஷ், விஜி சந்திரசேகர், ஜகன் மற்றும் ‘மைம்’ கோபி ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ். இசையில், ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில், டி.எஸ்.சுரேஷ் படத் தொகுப்பில், ஜக்கியின் கலை இயக்கத்தில், திருவின் இயக்கத்தில் உருவாகும் இப்படம் முதல் நாள் படப்பிடிப்பிலிருந்தே சரியான திட்டமிடுதலுடன் வளர்ந்து வந்திருக்கிறது.

Mr. Chandramouli

Mr. Chandramouli

இது பற்றி படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறும்போது, “படத்தின் எல்லா கட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டன. படத்திலுள்ள நான்கு பாடல்களில் இரண்டு பாடல்கள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள இரண்டு பாடல்களை படமாக்க படக் குழுவினர் தற்போது தாய்லாந்து சென்றுள்ளனர். ‘கிராபி’யில் காதல் பாடலையும், ‘பேங்காக்’கில் ஒரு பப் பாடலையும் படமாக்கியுள்ளனர்.

எங்கள் படக் குழுவினரின் சுறுசுறுப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கிருந்தவர்கள் கண்டு வியந்துள்ளனர். படத்தின் எடிட்டிங், டப்பிங், இசைக்கோர்ப்பு உள்ளிட்ட பணிகளை உடனே துவங்கி கூடிய விரைவில் படத்தை ரிலீசுக்குத் தயாராக்கவுள்ளோம்.

மிஸ்டர். சந்திரமௌலி’ படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் வாங்கியுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் நடைபெறும். இந்த படத்தை மே மாதம் முதல் வாரம் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.

இது தமிழ் ரசிகர்களுக்கு கோடை விடுமுறையில் ஒரு மெகா விருந்தாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்..!” என்றார் உற்சாகத்துடன்