லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்தப் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீசாக வேண்டியிருந்தது. ஆனால் கரோனா பாதிப்பால் படம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Master Releases in Amazon Prime
மாஸ்டர் படம் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிடப்படும் என்று அவ்வப்போது செய்திகள் பரவி வருகிறது. ஆனால் படம் முதலில் திரையரங்குகளில் வெளியான பிறகுதான் ஓடிடி தளங்களில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ முன்னர் கூறியிருந்தார்.
இந்நிலையில் அமேசான் பிரைமில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி மாஸ்டர் வெளியிடப்படும் என்று செய்திகள் வெளியானது. ஆனால் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படம் இது அல்ல என்றும் செய்திகள் பரவியது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இது குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ, “மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் தியேட்டரில் தான் வெளியாகும். அமேசான் பிரைமில் குறிப்பிடப்பட்டுள்ள மாஸ்டர் படம் 2016 ஆம் ஆண்டில் வெளியான கொரியன் படம்” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.