July 5, 2025
  • July 5, 2025
Breaking News
November 8, 2018

மெரினா புரட்சி க்கு மீண்டும் தடை விதித்த கௌதமி

By 0 1009 Views

எம்.எஸ். ராஜ் இயக்கத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேசும் ‘மெரினா புரட்சி’ படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் எந்த காரணமும் சொல்லாமல் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பினர்.

தற்போது படத்தை பார்த்த நடிகை கவுதமி தலைமையிலான ரிவைசிங் கமிட்டியும் எந்தக் காரணமும் சொல்லாமல் மீண்டும் படத்துக்கு தடை விதித்துள்ளனர்.

Indian Cinematograph Act 1983 விதியின்படி ரிவைசிங் கமிட்டி மறுப்பு தெரிவித்தால் FCAT எனப்படும் ‘டெல்லி டிரிப்யூனல்’ சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை. ஆனால் மெரினா புரட்சி படத்திற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு இரண்டாவது ரிவைசிங் கமிட்டிக்கு படம் அனுப்பப்பட்டிருக்கிறது.

இப்படி காரணமின்றி நிராகரிப்பதும் காலதாமதம் செய்வதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம் தான் இந்த தடைக்கு காரணமாக இருக்குமோ எனும் ஐயம் எழுகிறது என்றும் படக்குழுவினர் ஐயம் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழர்களின் பெருமை மிகு அடையாளமான ஜல்லிக்கட்டு போராட்டத்தை உரத்த குரலில் சொல்லும் ‘மெரினா புரட்சி’ படத்தை முடக்கும் அனைத்து சதிகளையும் முறியடிக்க நாச்சியாள் பிலிம்ஸ் குழுவினர் உறுதியுடன் இருக்கிறோம்..!” என்கிறார்கள் அவர்கள்.

இதையெல்லாம் தாண்டி சாதிப்பதுதானே புரட்சி..?