March 22, 2025
  • March 22, 2025
Breaking News
January 11, 2020

தர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்

By 0 806 Views

கடந்த 9 அன்று உலகம் முழுக்க வெளியானது ரஜினி நடிப்பில் உருவான தர்பார். நல்ல வரவேற்பு பெற்று ஒட்டிக்கொண்டிருக்கும் இந்தப் படம் பற்றி சில விரோதிகள் வாட்ஸ் ஆப்பில் அவதூறு பரப்பி வருகிரார்கள்.

ஒரு வாட்ஸ் ஆப் பதிவில் படத்தை முழுவதும் பகுதி பகுதியாக பிரித்து காட்சிகளாக அனுப்பி “இதில் முழுப்படமும் உள்ளது. கண்டு ரசியுங்கள்…. யாரும் தியேட்டரில் சென்று படத்தைப் பார்க்காதீர்கள். அவர்கள் நஷ்டம் அடைய வேண்டும்…” என்று அதனுடன் குரல் பதிவும் பரப்பப்பட்டு வருகிறது.

இதில் ஷாக் அடைந்த லைகா நிறுவனம் இது குறித்து இப்படி வதந்தி பரப்பியது யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மேல் கிரிமினல் நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனரிடம் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இது குறித்த புகார் மனு ஒன்றும் போலீஸ் கமிஷனரிடம் கொடுக்கப்பட்டுள்ளது….

அந்த புகார் மனு கீழே…

Police complaint from lyca

Police complaint from lyca