October 27, 2025
  • October 27, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • லெஜண்ட் சரவணன் உடன் நடித்ததால் படக்குழுவினருக்கு கிடைத்த லாபம்
January 18, 2020

லெஜண்ட் சரவணன் உடன் நடித்ததால் படக்குழுவினருக்கு கிடைத்த லாபம்

By 0 693 Views

தனது முதல் படத்திலேயே அதிரடி மற்றும் நடன காட்சிகளில் அழுத்தமாக தடம் பதிப்ப தாக கூறப்படும் லெஜென்ட் சரவணன் தயாரித்து, நடிக்கும் பிரம்மாண்டமான படத்தை இயக்குனர்கள் ஜேடி & ஜெர்ரி இயக்குகிறார்கள்.

முதற்கட்ட படப்பிடிப்பாக, கலை இயக்குனர் எஸ் எஸ் மூர்த்தியின் அமைப்பில் உருவான மிகப் பிரம்மாண்டமான செட்டில், இப்படத்திற்கான பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது.

நடன இயக்குனர் பிருந்தாவின் அமைப்பில், நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நடன கலைஞர்களுடன் இணைந்து, மிகவும் நளினமாக, அருமையாக நடனமாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினாராம் லெஜென்ட் சரவணன்.

அதனைத் தொடர்ந்து, சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான லேபரட்டரி செட்டில், சண்டை காட்சி அமைப்பாளர் அனல் அரசுவின் இயக்கத்தில், அதிரடியான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது.

நடனத்தைத் தொடர்ந்து, சண்டை காட்சிகளிலும் அபாரமாக நடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவரது அர்ப்பணிப்பையும், ஈடுபாட்டையும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் வியந்து பாராட்டினர் என்கிறார்கள்.

அத விடுங்க… அதைவிட அவரை அடையாளப் படுத் ஒரு முக்கியமான விஷயம் இருக்கு.

தமிழர் திருநாளைக் கொண்டாடும் விதமாக 200க்கு மேற்பட்ட படக்குழுவினர் அனைவருக்கும் பாரம்பரிய முறையில் லெஜென்ட் சரவணன் பொங்கல் பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தினாராம்.

லேஜெண்ட் உடன் நடித்ததில் இப்படி ஒரு லாபம் கிடைக்க மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களாம் படக்குழுவினர்.

அண்ணாச்சி யொட நடிச்சிட்டு இதுகூட கிடைக்கலன்னா எப்படி?